கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 140 கோடி ரூபாயை வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது.

இயக்குனர் அட்லி, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு என தமிழ் சினிமாவை சேர்ந்த பலர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் பெரிய வசூல் கிடைக்கும் என ஜவான் படக்குழு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இதையும் படிங்க: கேக் சைஸ் கூட பெரிசா இல்லையே!.. இதுதான் கிராண்ட் சக்சஸா?.. அமுல் பேபியை அழவிடும் நெட்டிசன்கள்!..

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிப்பார் என்று விஜய் ரசிகர்கள் ரொம்பவே அந்த படத்திற்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தியேட்டருக்கு முதல் நாளில் ஜவான் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு நடிகர் விஜயின் கேமியோ ரோல் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

எப்படியாவது இயக்குனர் அட்லி தளபதி விஜய்யை ஒரு சீனிலாவது நடிக்க வைத்திருப்பார் என்று நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிட்டனர். மேலும், ஏகப்பட்ட தமிழ் சினிமாக்களில் இருந்து காட்சிகள் சுடப்பட்டு அட்லி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்கிற விமர்சனம் ஜவான் திரைப்படத்தின் வசூல் வேட்டைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!..

நடிகர் மகேஷ்பாபு ட்வீட் போட்டு ஜவான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை போல தளபதி விஜய்யும் ட்விட்டரில் ஆவது வாழ்த்தி இருந்தால் தமிழ்நாட்டில் ஜான் படத்திற்கு கூடுதல் வசூல் கிடைத்திருக்கும் எனக் கூறுகின்றனர்.

இந்தியா முழுவதும் முதல் நாளில் 75 கோடி வசூலை ஈட்டிய ஜவான் திரைப்படம் தமிழ்நாட்டின் முதல் நாளில் வெறும் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். நடிகர் விஜய் மட்டும் இந்த படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்று இருந்தால் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டிலும் 15 கோடி முதல் 20 கோடி வரை மிகப்பெரிய வசூலை ஈட்டி இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நயன்தாரா ஹீரோயினாக போடப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டில் பெரிய வசூல் வேட்டை நடக்காததால் அட்லீ மீதும் நயன்தாரா மீதும் அதிருப்தியில் ஷாருக்கான் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் வசூல் குறைந்தாலும் இந்த படம் உலகம் முழுவதும் செய்து வரும் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக் பல படங்களின் வசூல் சாதனைகளை விரைவில் முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story