இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்காரே ஷாருக்கான்!.. ஜவான் இன்னும் அந்த மைல் கல்லை தொடலையாம்!..

by Saranya M |
இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்காரே ஷாருக்கான்!.. ஜவான் இன்னும் அந்த மைல் கல்லை தொடலையாம்!..
X

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் பத்தாவது நாள் அதிகாரபூர்வ வசூல் தற்போது வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரசிகர்களை காக்க வைக்காமல், தவறான பாக்ஸ் ஆபிஸ் டிராக்கில் நண்பர்களுக்கு இரையாகாமல் ஷாருக்கான் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு சரியான பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களை வழங்கி வருகிறது.

சில தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் பாக்ஸ் ஆபிஸ் நண்பர்களே நம்புவதா இல்லையா என்கிற கேள்விக்கு உட்பட்டு வரும் நிலையில், புள்ளி விவரத்தோடு எத்தனை லட்சங்கள் வசூல் செய்தது என்கிற கணக்குடன் ஜவான் படத்தின் வசூல் அறிக்கை தினமும் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: லியோ படத்தில் இருந்து அந்த நடிகையை தூக்கிட்டாங்களா?.. கடைசியில லோகேஷ் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல!..

ஜவான் திரைப்படம் சனிக்கிழமையான நேற்று பெற்ற வசூலுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 797.50 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஷாருக்கான் நிறுவனம் நினைத்திருந்தால் 800 கோடி வசூல் என்று அறிவித்திருக்கலாம்.

ஆனால், தவறான பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொல்லி விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதனால் தான் இப்படி ஒரு வசூல் அறிவிப்பு வெளியாகியுள்ளது என ஷாருக்கான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோ அப்டேட் வந்தாச்சு!.. போரை முடிஞ்ச வரை தவிர்க்கும் தளபதி.. லியோ போஸ்டரில் இதை கவனிச்சீங்களா!..

ஞாயிற்றுக்கிழமை இன்று ஜவான் திரைப்படம் மேலும் பெரிய வசூல் வேட்டையை நடத்த இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை 850 கோடிக்கு மேல் வசூல் நிலவரம் வெளியாகும் என தெளிவாக தெரிகிறது. திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் அதிகபட்சமாக 900 கோடி வசூலை திவான் திரைப்படம் இரண்டாவது வாரத்தின் முடிவில் எட்டும் என கணிக்க முடிகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இரண்டு வாரங்களில் மூன்று மடங்கு வசூல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

Next Story