Connect with us

Cinema History

அஜித் மச்சானுடன் ஷகீலாவுக்கு வந்த காதல்… திருமண நேரத்தில் நடந்த பிரேக்அப்… புதுக்கதையா இருக்கே?..

Shakeela: பிரபல நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகை ஷாலினியின் தம்பியும் தான் நடிகர் ரிச்சார்ட் ரிஷி. சினிமாவில் உச்ச நடிகராக ஆசைப்பட்ட இவருக்கு அது அமையாமல் இருக்கும் நிலையில் இவரின் காதலும் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆன அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரியானவர் ரிச்சர்ட். இதைத்தொடர்ந்து தமிழ்,  தெலுங்கு,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தாலும் ரிச்சர்ட்க்கு இன்னும் சரியான வரவேற்பு சினிமா துறையில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இதையும் படிங்க: தக் லைஃபில் நான் கேமியோ ரோல் தான்… உண்மையை உடைத்த ஜெயம் ரவி… ஆனா அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரௌபதி திரைப்படம் பெரிய வசூலை பெறவில்லை என்றாலும்  ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.  இது ஒரு புறம் இருக்க நடிகர் ரிச்சர்டும்,  நடிகை ஷகீலாவும் காதலித்து வந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஷகீலாவும், ரிஷியும் 15 வயது இருக்கும் போதிலிருந்து காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். 

ஒரு கட்டத்தில் ஷகீலாவின் தந்தை இறந்துவிட ரிச்சர்ட் அவரை பார்த்துக்கொண்ட அன்பை வைத்தே ஷகீலாவுக்கு அவர் மீது காதல் மலர்ந்ததாம்.  காதலிக்க தொடங்கினாலும் இருவரும் ஒரு கட்டம் வரை நண்பர்களாகவே இருக்கலாம். வாய்ப்பு அமைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் ரிஷியும் பிசியாக நடிக்க தொடங்கினார்.

ஷகீலாவுக்கும் தொடர் வாய்ப்புகள் அமைந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் வறுமையால் ஷகீலா அடல்ட் பட நடிகையானார். அதுவே இருவரின் காதலையும் பிரித்து விட்டது.  இன்று பிரிந்தாலும் இன்று வரை இருவரும் நண்பர்களாகவே இருப்பதாக ஷகீலா தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ரிச்சர்ட் ரிஷி இன்று வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை!… அது எனக்கு ரொம்ப கஷ்டம் தான்… ஓபனாக பேசிய பிரசாந்த்…

google news
Continue Reading

More in Cinema History

To Top