தவறாக நடந்து கொண்ட நடிகரை பெயரை சொல்லாமல் இருக்க காரணம் தெரியுமா? விசித்ரா விட்டதை போட்டுடைத்த ஷகீலா..!
Shakeela: கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த ஷகீலாவுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குடும்ப ரசிகர்களை பெற்று தந்தது. இதையடுத்து மீண்டும் வைரலாகி இருக்கும் ஷகீலா, தற்போது தமிழ் பிக்பாஸில் இருக்கும் விசித்ரா குறித்து ஷாக் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஷகீலா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டார். ஓபனாக சிகரெட் பிடித்து மாஸ் காட்டலாம் என நினைத்தவர் இரண்டே வாரத்தில் வெளியேறினார். இதை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் தமிழ் பிக்பாஸில் இருக்கும் விசித்ரா குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..
நடிகை விசித்ராவுக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தினை நிகழ்ச்சியில் சொல்ல தைரியம் இருந்தது. ஆனால் நடிகர் பெயரை ஏன் அவர் மறைத்து விட்டார். தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகரான அவர் பெயரை சொல்லி அவமதித்து விட்டால் நாளை தெலுங்கு திரையுலகம் பக்கம் போக முடியாது என்பதால் தானே.
முக்கியமாக இப்படி ஒரு சம்பவத்தால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்தார். ஆனால் பெரிய இடைவேளைக்கு பின்னர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி என அவர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இருப்பது புகழை தேடத்தானே. இதன் மூலம் சினிமா வாய்ப்புக்கு தானே கொக்கி போடுகிறார்.
இதையும் படிங்க: தளபதியால ஹிட்தான் கொடுக்க முடியும்! ஆனால் வாழ்க்கை கொடுத்தது இவரு – அட்லீயின் வெற்றிக்கு காரணமான அந்த நடிகர்
நான் இந்த படத்தில் நடிக்க சம்பளம் வாங்கி விட்டேன். அடுத்த படம் எனக்கு தேவையே இல்லை. வேண்டவும் வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். இப்போ அவர் இல்லை. ஆனால் தெலுங்கு திரையுலகமே என்னிடம் வந்து கேட்டாலும், ஆமா அவர் என்னை தப்பா கூப்பிட்டார் எனக் கூறுவேன். ஏன் விசித்ராவால் கூற முடியவில்லை என கறாராக கூறி இருக்கிறார்.