சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஷகீலாவிற்கு திடீர் தடை... பரபரப்பு பின்னணி

shakeela
சினிமா நிகழ்ச்சிகளில் நடிகை ஷகீலா கலந்துக்கொள்ள திரை வட்டாரம் தடை விதித்திருக்கும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பி கிரேட் திரைப்படங்களில் நடித்து பெருவாரியான ஆண்களிடம் ரீச்சான நடிகை ஷகீலா. அவரின் திரை வாழ்வு பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்.

shakeela
ஷகீலா மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, இவர் நடிப்பில் உருவான கிணரத்தும்பிகள் என்ற மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. பி கிரேட் நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.
டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸாகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் ஷகீலாவின் படத்தினை வெளியிடுவது மறைமுகமாக தடை செய்ப்பட்டது. இதை தொடர்ந்து சினிமா திரையுலகத்தில் இருந்தே விலகி இருந்த ஷகீலா குக் வித் கோமாளி படம் நிகழ்ச்சி மூலம் பெரிய புகழை பெற்றார்.

shakeela
இந்நிலையில், ஒமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் இன்று கோழிக்கோட்டில் நடக்க இருந்தது. இந்த விழாவிற்கு நடிகை ஷகீலாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வர சம்மதம் தெரிவித்து இருந்தார்.
அவரை காண ஏராளமான ரசிகர்கள் வர இருப்பதாக தகவல்கள் இருந்தது. இதை தொடர்ந்து கோழிக்கோட்டில் சினிமா அறிமுக விழா நடக்க இருந்த வணிக வளாகம் விழாவில் நடிகை ஷகீலா பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது.
ஆனால் இப்படக்குழு ஷகீலா இருந்தால் தான் நிகழ்ச்சியை நடத்துவோம் எனக் கூறி ரத்து செய்யவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.