ஷகீலானு பேரு சொல்லவே கடுப்பா இருக்கு… ஹேமா கமிட்டி பத்தி அவங்க பேசலாமா? வெளுக்கும் பிரபலம்
Shakeela: ஷகீலா தன்னிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக நடிகை ஒருவர் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நடிகை மாலதி அளித்திருக்கும் பேட்டியில், நான் என்னுடைய ஷூட்டிங்கில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஷகீலா பேட்டிகளை பார்த்து இருக்கேன்.
இதையும் படிங்க: அடுத்து வேட்டையன் வராரு! ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?
அவரிடம் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் அந்த பேட்டியில் கலந்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் திமிராக தான் ஷகீலா பேசினார். எனக்கு சப்போர்ட் செய்யாதவர். ஓபன் போட்டோஷூட் செய்யும் பெண்ணுக்கு சப்போர்ட் செய்கிறார்.
என்ன பத்தி அவங்களுக்கு எதுவுமே தெரியலை. ஏற்கனவே எழுதி வைத்திருந்த கேள்வியை தான் கேட்டார்கள். நான் ஒரு படம் பண்ணி இருப்பதால் எனக்கெல்லாம் அட்ஜஸ்மெண்ட் பத்தி என்ன தெரியும் எனக் கேள்வி எழுப்பினார். தப்பு செய்ற பெண்ணுக்கு ஆறுதலா பேசுறாங்க. எனக்கு அப்படி பேசலை.
இதையும் படிங்க: வசூலில் இந்திய அளவில் விஜய்தான் நம்பர் ஒன்.. அட ரஜினி, ஷாருக்கான் கூட இல்லயே!…
சரி இவங்க இவளோ பேசுறாங்களேனு அவங்க பத்தி கூகுளில் தேடினேன். அம்மா எனச் சொல்லும் பிரபலத்தை இப்படியா என்னும் லெவலுக்கு இருந்தார். அதை சொல்லவே வாய் கூசுது. ஒரு நடிகை எவ்வளோ கஷ்டப்படுறாங்கனு ஹேமா கமிட்டி சொல்லுது. அந்த அடிப்படையே தெரியாம ஷகீலாலாம் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பத்தி பேசலாமா?
என்னை பேசவே விடாமல் நான் வேலை பார்த்த முன்னாள் துறைகளையுமே மோசமாக பேசினார். சினிமாவில் எல்லாருக்குமே அட்ஜஸ்மெண்ட் நடக்கும். சிலருக்கு நேராக சிலருக்கு மறைமுகமாக அந்த பிரச்னை இருக்கும். நடிகைகள் ஸ்மார்ட்னெஸ் காட்டி பிழைத்து கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.