ஆண் நடிகரை பெட் ரூம்க்கு அழைத்த தயாரிப்பாளர்… மனம் திறக்கும் ஷகீலா பட ஹீரோ…
என்னதான் நாம் ஆபாச திரைப்பட நடிகர்களை இழிவாகப் பார்த்தாலும், கலை என்ற ஒன்று இந்த உலகத்தில் தோன்றியதில் இருந்தே பாலியல் உறவு குறித்த கதைகளும், ஓவியங்களும் நம் மக்களின் கலாச்சாரத்தில் தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் சினிமா என்ற தொழில்நுட்பம் வளர்ந்த பின்பு பாலியல் உறவு குறித்த திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் இது கலாச்சார சீரழிவாக பார்க்கப்பட்டாலும், பலரும் இத்திரைப்படங்களை பார்க்கத்தான் செய்கின்றனர். இது மனித வாழ்வில் இயற்கையான ஒன்று என்பதால் இதற்கு பூட்டு போட அவசியம் இல்லை என்பது பலரின் கருத்து.
பிரபல நடிகை ஷகீலாவை குறித்து நாம் பலரும் அறிந்திருப்போம். தொடக்கத்தில் அவரை ஒரு ஆபாச பட நடிகை என்றுதான் பார்த்தார்கள். ஆனால் அதன் பின் அவர் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பலரும் அவரை “ஷகீலாம்மா” என்றே மிகவும் தாய்மை உணர்வோடு பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடன் பல திரைப்படங்களில் நடித்த வெற்றி விஜய் என்ற நடிகரை ஷகீலாவே பேட்டிகண்டிருந்தார். அப்போது வெற்றி விஜய் பல விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வெற்றி விஜய் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் பிற்காலத்தில் அவருக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. அப்போதுதான் “ஏ” ரேட்டட் திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. பணம் நன்றாக கிடைக்கிறது என்ற காரணத்தால் அவரும் அத்திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதன் பின் ஷகீலாவோடு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அவர். எனினும் அவரும் ஷகீலாவும் அண்ணன் தங்கை போலவே பழகி வந்திருக்கின்றனர். இதனிடையே சினிமாத் துறையைச் சேர்ந்த முக்கிய நடிகைகள் அவரை காதலிக்க ஆசைப்பட்டார்களாம். ஆனால் அவர் அவர்களை எல்லாம் தவிர்த்திருக்கிறார்.
மேலும் பல ஆண்களும் அவருடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பினார்களாம். அதாவது தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவரை ஒரு நாள் அந்த நோக்கத்தில் அழைத்திருக்கிறார். ஆனால் அவர் அந்த தயாரிப்பாளரிடம் சிக்கவில்லையாம். இவ்வாறு பாலியல் ரீதியாக பல ஆண்கள் தன்னை அணுகியதாக அப்பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இது போன்ற திரைப்படங்களில் நடித்ததால் தான் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைப்பதில் தாமதமானதாகவும் கூறியிருக்கிறார். அதே போல் தான் நன்றாக படித்திருந்தால் வேறு ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பேன் எனவும் மிக வருத்ததுடன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அஜித் மீது முதன்முதலில் குற்றச்சாட்டு வைத்தவர் இவராகத்தான் இருக்கும்… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?