ஷாருக்கான் படத்தையே தூக்கிப் போட்டுட்டேன்!.. அவரோட நான் பாப்புலர்!.. ஷகீலா சொன்னதை கேட்டீங்களா!..

Published On: April 9, 2025
| Posted By : Saranya M

ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நயன்தாரா கூட நோ சொல்லாமல் பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்து விட்டார். ஆனால், ஷாருக்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாமென உதறித்தள்ளிவிட்டேன் என நடிகை ஷகீலா சமீபத்தில் பேசும் போது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

பிட்டு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலா விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட சில படங்களில் கில்மா கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க ஷகீலாவுக்கும் அழைப்பு வந்ததாம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படம் என்பதால், காஸ்டிங் டைரக்டர் ஆடிஷன் வைத்துதான் எடுக்க வேண்டும் என்று சொன்னதும் ஷகீலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதாம். யாரை பார்த்து ஆடிஷன் வச்சு எடுக்கணும்னு சொல்ற, கூகுள் செய்துப்பார், ஷாருக்கான் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஷகீலான்னு சொன்னா தெரியாத ஆளே இல்லை என சொல்லிவிட்டு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையே தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன் என ஷகீலா கூறியுள்ளார்.

ஷகீலா நடிக்க வேண்டிய கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கடைசியாக பிரியாமணி நடித்தாரா என ரசிகர்கள் யூகங்களை கிளப்பி வருகின்றனர். அந்த படத்தில் மும்பையில் இருந்து கேரளாவுக்கு தீபிகா படுகோன் ஊருக்கு ஷாருக்கான் வருவது போலவும் அங்கே அவருடைய அப்பா சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஷகீலாவும் அந்த படத்தில் நடித்திருந்தால் சரியாக இருந்திருக்கும் ஷகீலா பத்தி தெரியாத நபர் தான் தலைவியை இன்சல்ட் செய்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.