மோகன்லால் ஏன் விலகணும்? ரூபஸ்ரீக்கு நடந்த அக்கிரமத்தைப் பாருங்க...

by sankaran v |
shakeela
X

shakeela

மலையாளத்துல மட்டும் தான் நடக்குதா? இங்கும் நடக்குது. இதை விட அதிகமா தெலுங்கிலும், இந்தியிலும் நடக்குது. அந்தக் கமிட்டி இங்கும் வேணும். நம்ம மேல தப்பு இல்லன்னா நாம விலகுவோமோ... விவாதம் பண்ணுவோம் அல்லவா.

அப்படின்னா ஏன் அவரு பேரே வராத போது மோகன்லால் நடிகர் சங்கத்துல இருந்து விலகணும். நடிகை ஷகீலா மலையாளத் திரையுலகில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து இப்படி பேசியுள்ளார். மேலும் என்னென்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா...

எங்காவது பிரச்சனைன்னா சங்கம் பேசத் தான் செய்யும். கலைஞ்சிப் போறதைப் பார்த்து இருக்கீங்களா? இருக்குறதுலயே கேவலமான சங்கம் எங்களுக்கு நடந்துக்கிட்டு இருக்குறது தான்.

Also read: மலையாள சினிமாவை சிதைத்த உச்ச நடிகர்… பிரித்விராஜுக்கே வாய்ப்பு கிடைக்காமல் செய்த சதி…

மலையாளத்திரையுலகில் அக்ரீமென்ட்லயே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்னு போட்டுருக்கு. பெரிய ஸ்டார்னா நம்மள இவங்க கூப்பிட மாட்டாங்களான்னு தான் நினைப்பு வரும். எனக்கும் இப்படித்தான் இருக்கும். ஏன்னா ஹீரோ. அவங்க கூட இவங்களே போயிடுவாங்க. அது பெரிய கம்ப்ளெய்ண்டா வந்துருக்காது. ஏன்னா அவங்க பெரிய நடிகர். டைரக்டர் கூப்பிடுறது. மேனேஜர் கூப்பிடுறது.

புரொடியூசர் கூப்பிடுறது. அதுவும் டைரக்டர், புரொடியூசர்ஸ் எல்லாம் நீ அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியே ஆகணும்னு சொல்றாங்க. இங்கே பேசுறாங்க இங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நீங்க அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்னு அக்ரீமெண்ட்லயே இருக்கு. நடிகை ரூபாஸ்ரீ ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிக்கிட்டு இருக்காங்க.

என்னோட ரூம் எதிரில இருக்காங்க. அவங்க ஃபுல்லா குடிச்சிட்டு வந்து கதவைத் தட்டி அந்தப் புள்ள உள்ளே இருந்து பயந்து அலறி கத்துறாங்க. அதுக்கு அப்புறமா நாங்க எங்க கதவைத் திறந்து போய் பார்க்குறோம். நாலஞ்சு ஆளுங்க ஃபுல்லா டிரிங்க் பண்ணிட்டு நிக்கிறாங்க. ஏன்னு கேட்டதுக்கு அடிதடி. நானு, என் தம்பி, ப்ரண்ட்ஸ் எல்லாம் போயிருக்குறோம்.

Also read: விஜய்கிட்ட இத எதிர்பார்க்கவே இல்ல.. மூத்த நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா?

அந்த ஆளு என்னை அடிச்சி நான் அவனை அடிச்சி. எனக்கு சம்பந்தமே இல்ல. ஏன்னு கேட்டதுக்கு இவ்ளோ பேசுறாரு. அப்புறம் அமெரிக்காவுல இருந்து அச்சாயான்னு ஒருத்தர் சூட்டிங் வருவாரு. அவருக்கிட்ட பேசி வண்டி ஏத்தி அவங்களை சென்னைக்கு அனுப்பிச்சோம். இது நிறைய நடந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story