ஷகீலாவிற்கும் அஜித்திற்கும் என்ன சம்பந்தம்! திடீர் புரளியை கிளப்பி விட்ட பயில்வான்
பிட்டு பட உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகீலா.மலையாள படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார் ஷகீலா. பரங்கிமலை ஜோதி தியேட்டரில் ஷகீலாவிற்கென்றே பிட்டு படத்தை பார்க்க ஆர்வமாக ரசிகர்கள் போவார்களாம்.அந்த அளவுக்கு ஷகீலா மிகவும் பிரபலமானார்.
எதையும் ஓப்பனாக தைரியமாக பேசுவதில் ஷகீலாவை மிஞ்சுவதில் யாருமில்லை. கேரளாவில் கூட மம்மூட்டி, மோகன்லால் திரைப்படங்களை விட ஷகீலாவின் திரைப்படங்களுக்குத்தான் அமோக வரவேற்பு கிடைக்குமாம்.
இதனால் கோபம் கொண்ட நடிகர்கள் தியேட்டர் அதிபர்களிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் இனிமேல் ஷகீலா சம்பந்தப்பட்ட எந்தப் படங்களும் வெளிவரக்கூடாது என்றெல்லாம் பேச்சு வந்ததாம். அம்மணிக்கு கிடைத்த வரவேற்பு வேறு எந்த நடிகைக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு சில சினிமா படங்களிலும் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் ஷகீலா. பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்திலும் ஒரு கணக்கு டீச்சராக வந்து அனைவரையும் மிரள வைத்திருப்பார் ஷகீலா.
பிட்டு பட நாயகி என்றே பேர் வாங்கிய ஷகீலாவை அனைவரும் அம்மா என்ற அழைக்கக் காரணமாக இருந்தது விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சி மூலம் தன் மேல் இருந்த இமேஜை சுக்கு நூறாக உடைத்தார் ஷகீலா.மேலும் பொது விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
தனியாக யுடியூப் சேனலில் ஒரு சில நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷகீலா நடிகர் அஜித்தை பற்றி ஒரு விமர்சனம் முன்வைத்தாராம். அதாவது அஜித்திற்கு ஆடவே தெரியாது என்று கூறியிருந்தாராம்.
இதையும் படிங்க :டோட்டல் வாஷ் அவுட்! 100 நாள் ஓட வேண்டிய படம்! தயாரிப்பாளரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பார்த்திபன்
இதை கேள்விப்பட்ட பயில்வான் ரெங்கநாதன் ஷகீலாவை பார்த்து ‘ஏம்மா ஷகீலா, அஜித் இந்த வயசுலயும் ஆடுறாரு, நடிக்கிறாரு, உன்னால ரெண்டு மாடி ஏறி இறங்க முடியுமா? மேலும் அஜித்திற்கு எவ்வளவு உடல் உபாதைகள் இருக்கிறது? அதையெல்லாம் வைத்துக் கொண்டும் ஆடிக் கொண்டுதானே இருக்கிறாரு, அவர பத்தி பேசுறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை’ என்று வெளுத்து வாங்கினார்.