சிம்புவ ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? தனுஷ் விவாகரத்து விஷயத்தில் கொந்தளித்த ஷகீலா....!

by ராம் சுதன் |
shakila
X

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதற்கு பல பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் விவாகரத்து குறித்து பிரபல நடிகை ஷகீலாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

dhanush with his wife

அதில் அவர் கூறியிருப்பதாவது, "தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவது அவர்களின் தனிப்பட்ட விஷயம். சுமார் 18 ஆண்டுகள் வரை கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில் தற்போது அது சரி வராமல் பிரிந்துள்ளனர். மேலும் எங்கள் தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அப்படி இருக்கும் போது, இதை விமர்சனம் செய்ய நீங்கள் யார்? ஏன் சம்மந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் இணைத்து கருத்து வெளியிடுகிறீரகள். இதே போல, ஒரு நிகழ்வு உங்கள் வீட்டில் நடந்தால் இது மாதிரி சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைத்து வைத்து பேசுவீர்களா?

simbu-dhanush

simbu-dhanush

தனுஷ் இவருடன் இணைய போகிறார், அவருடன் இணையப் போகிறார் என நீங்களே கிளப்பி விடுகிறீர்கள். தேவையில்லாமல், சிம்பு உள்ளிட்ட பலரின் பெயர்களையும் இணைத்து பேசுகின்றனர். இவர்களின் விவாகரத்து விஷயத்தில் ஏன் மற்றவர்களை வம்புக்கு இழுக்குறீர்கள்? இந்த விஷயத்தில் இரண்டு குடும்பமும் எவ்வளவு மனவேதனையில் இருப்பார்கள்.

இது எதையுமே நினைத்து பார்க்காமல் எப்படி உங்க இஷ்டத்துக்கு உங்களால பேச முடியுது" என தனுஷ் விவாகரத்து விஷயத்தில் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திரைபிரலங்கள் என்றால் அவர்களுக்கென தனிப்பட்ட வாழ்க்கை இல்லையா அதில் ஏன் நீங்கள் தலையிடுகிறீர்கள் என அவர் கேட்பது நியாயம் தானே?

Next Story