தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் பி.வாசு. “சின்னத்தம்பி”, “நடிகன்”, “பணக்காரன்”, “மன்னன்”, “உழைப்பாளி”, “சந்திரமுகி” போன்ற பல முக்கிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் இவர்.
வாசு-பாரதி
பி.வாசு தொடக்கத்தில் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அதனை தொடர்ந்து சக உதவியாளராக பணிபுரிந்த சந்தான பாரதியுடன் இணைந்து “பன்னீர் புஷ்பங்கள்’, “மதுமலர்”, “மெல்ல பேசுங்கள்’, “நீதியின் நிழல்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்கள். இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து தனி தனியே திரைப்படங்கள் இயக்கத் தொடங்கினார்கள்.
வெற்றி இயக்குனர்
பி.வாசு, சந்தான பாரதியிடம் இருந்து பிரிந்த பிறகு அவர் தனியாக இயக்கிய முதல் திரைப்படம் “கதாநாயகா” என்ற கன்னட திரைப்படம். அதனை தொடர்ந்து “குரி”, “ஜெயசிம்ஹா”, “ஜீவன ஜோதி”, “தாதா” போன்ற கன்னட திரைப்படங்களை இயக்கினார். இத்திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்தது.
தமிழின் முன்னணி இயக்குனர்
இவ்வாறு கன்னடத்தில் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக உருமாறிய பி.வாசு, தமிழில் “என் தங்கச்சி படிச்சவ”, என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து “பிள்ளைக்காக”, “பொன்மனச் செம்மல்”, “வாத்தியார் வீட்டுப் பிள்ளை” போன்ற படங்களை இயக்கினார். இத்திரைப்படங்களை தொடர்ந்து ரஜினியை வைத்து “பணக்காரன்” என்ற திரைப்படத்தை இயக்கினார், இத்திரைப்படம் அவரை தமிழின் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.
சின்ன தம்பி
அதனை தொடர்ந்து “வேலை கிடைச்சிடிச்சி”, “நடிகன்”, போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த பி.வாசு, இத்திரைப்படங்களை தொடர்ந்து “சின்ன தம்பி” என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். இதில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் பிரபுவின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் பி.வாசுவின் பையனான சக்தி நடித்திருந்தார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான “தொட்டால் பூ மலரும்” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை.
அதனை தொடர்ந்து “நினைத்தாலே இனிக்கும்”, மகேஷ் சரண்யா மற்றும் பலர்”, “ஆட்டக்காரன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். எனினும் எந்த திரைப்படமும் அவரது கேரியருக்கு கைக்கொடுக்கவில்லை.
ஷூட்டிங்க் ஸ்பாட்டில் வந்த கோபம்
இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்குகொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த சக்தி, தான் மிகவும் வெறுப்பின் உச்சத்தில் இருந்ததாகவும், இப்போது ஆன்மீகத்தால் அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறினார். அதே போல் வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், அத்திரைப்படம் தனக்கொரு கம் பேக் ஆக இருக்கும் எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர் தனது முதல் திரைப்படமான “தொட்டால் பூ மலரும்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த அனுபவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.
“தொட்டால் பூ மலரும் படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நான் நடனம் கற்றுக்கொண்டிருந்த சமயம். இயக்குனரான எனது தந்தை எடிட்டிங் வேலைகளை பார்க்கச் சென்றுவிட்டார்.
மிகவும் மும்முரமாக பாடல் காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது தந்தை திடீரென உள்ளே நுழைந்தார். டான்ஸ் மாஸ்டர் என்னிடம் அடுத்த ஸ்டெப் என்ன என்பதை கூறிக்கொண்டிருந்தார். நான் அந்த ஸ்டெப்புகளை மனதில் ஏற்றிக்கொண்டிருந்தேன்.
இதையும் படிங்க: கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த்… ராதாரவி சொன்ன பஞ்ச் டயலாக்!! இப்படியா பண்றது??
அப்போது தந்தை திடீரென ‘மாஸ்டர் சொல்லிக்கிட்டு இருக்காரு. மாஸ்டரை பார்த்து பேசுடா’ என கூறி அசிங்கமாக திட்டிவிட்டார். எனக்கு டென்ஷன் ஆகிவிட்டது. அங்கேயே அவரிடம் “உங்களை யார் இப்போ உங்க வரச்சொன்னா?, எதுக்கு இப்போ கத்துறீங்க. கத்துனா டான்ஸ் வந்துருமா?” என நான் அவரை பார்த்து கத்திவிட்டேன். அப்பா ஷாக் ஆகிட்டார்” என தனது அனுபவத்தை அந்த பேட்டியில் சக்தி பகிர்ந்துகொண்டார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…