அஜித்-னு சொன்னதும் படிப்பை தூக்கி போட்டு ஓடி வந்த நடிகை...! பிள்ளையார் சுழி போட்ட இயக்குனர்...
முன்னனி நடிகர், மாஸ் நடிகர் என பல கோணங்களில் ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் நடிகர் அஜித். பல தோல்விகளை கடந்து வெற்றிபடிகளை அடைந்த அல்டிமேட் நடிகர். யாருடைய பின்புலமும் இல்லாமல் தன் சுயமுயற்சியால் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து அமர்க்களம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அதன்மூலம் தான் காதல் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தார்கள். முதலில் அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி சம்மதிக்க வில்லையாம். முதலில் கவிஞர் வைரமுத்து கேட்டு இல்லை எனக்கு படிக்க வேண்டும் நான் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம்.
பின் இந்த படத்தில் ஷாலினி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என இயக்குனர் சரண் நினைக்க அவரும் போய் கேட்டாராம். ஆனால் ஷாலினி மிகவும் யோசித்தாராம். இதை அஜித்திடம் வந்து சரண் சொன்னாராம். போன் பண்ணி கொடுங்கள் என அஜித் கேட்க சரண் ஷாலினிக்கு போன் பண்ணி அஜித்திடம் கொடுத்தாராம். அஜித் “ ஷாலினியிடம் நான் அஜித் பேசுகிறேன். இந்த படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்" என கூற ஷாலினி கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டாராம்.
முக்கியமாக அஜித்திற்காக தான் ஷாலினி இந்த படத்தில் நடித்தார். ஏற்கெனெவே ஷாலினியின் தோழிகள் அஜித்தின் மிகப்பெரிய ரசிகைகளாம். அதன் மூலம் ஷாலினிக்கு அஜித்தை பிடித்து விட்டதாம். இதை படத்தின் இயக்குனர் சரண் கூறினார். மேலும் இந்த படத்தில் ஷாலினியை நடிக்க வைத்ததன் மூலம் அஜித் ஷாலினியை சேர்த்து வைத்த பெருமை இவரையும் சேரும்.