அஜித் வீட்டில் வரலட்சுமி விரதம்!.. ஷாலினி எப்படி இருக்காங்க பாருங்க!..

shalini
Ajith Shalini: கோலிவுட்டில் ஒரு அழகான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கிட்டத்தட்ட 24 வருடங்களாக இருவரும் ஒரு இணைபிரியா தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.
ஷாலினி ஒரு முழு நேர குடும்பப் பெண்ணாகவே மாறிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் குழந்தை கணவன் என குடும்பத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் ஏற்று வழி நடத்தி வருகிறார். அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு அஜித்திற்கு ஒரு பக்க பலமாக இருப்பதே ஷாலினி தான் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: எஸ்.கே. இஷ்டத்துக்கும் பேசி கமலை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டாரே..! உலகநாயகன் இனி என்ன செய்வார்?
அந்த அளவுக்கு அஜித்தின் சில நடவடிக்கைகள் திருமணத்திற்கு பிறகு மாறி இருப்பதாகவும் அதற்கு ஷாலினி தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஷாலினிக்கு ஏதோ மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஒரு சின்ன சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அது சம்பந்தமான புகைப்படமும் வெளியானது.

shalini
அப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருந்த அஜித் தன் காதல் மனைவியை பார்க்க வந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அதற்கு முன்பு வரை அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஷாலினி ஆக்டிவாக இருந்து வந்தார்.

shalini
இதையும் படிங்க: ரெடியா மாமே!.. போலீஸ் கெட்டப்பில் ரஜினி!.. அட ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே!….
ஆனால் அவருடைய சர்ஜரிக்கு பிறகு சோசியல் மீடியாவில் ஷாலினியை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் ஷாலினி தன்னுடைய வீட்டில் வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். நீண்ட நாளுக்கு பிறகு சோசியல் மீடியாவில் திரும்பவும் வந்திருக்கிறார் ஷாலினி. அந்த புகைப்படத்தில் ஷாலினியும் அவரது தங்கை ஷாமிலியும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். அந்த புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.