உடைமாற்றும் போது அத்துமீறி நுழைந்த இயக்குனர்… கேரவனில் நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்

shalini_pandey
Shalini Pandey: அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழிலும் நடிகர் ஜீவாவுடன் கொரில்லா என்ற படத்தில் நடித்தார். அதுதான் அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ஷாலினி பாண்டே. குறிப்பாக பாலிவுட்டில் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்திருக்கிறார் ஷாலினி பாண்டே.
இந்த நிலையில் ஷாலினி பாண்டே அவருக்கு நடந்த சில கசப்பான சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதாவது என் வாழ்க்கையில் பல நல்லவர்களை பார்த்திருக்கிறேன். அதற்கு இணையாக சில கெட்டவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஷாலினி பாண்டே. அப்படி என்ன கெட்டவர்கள் என கேட்கும் போது ஒரு இயக்குனர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி கூறியிருந்தார்.
அதாவது கேரவனில் ஷாலினி பாண்டே உடை மாற்றும் போது அத்துமீறி ஒரு இயக்குனர் உள்ளே நுழைந்துவிட்டார் என்றும் அவரை பார்த்ததும் நான் உரக்க கத்திவிட்டேன் என்றும் ஷாலினி பாண்டே கூறினார். அவர் வேண்டுமென்றே தான் என் அறைக்குள் வந்தார் என்றும் அப்போது என் வயது 21 என்றும் கூறியிருந்தார் ஷாலினி பாண்டே.
அவரை பார்த்ததும் அதிர்ச்சியில் நான் கத்த என்னுடைய அந்த சத்தம் கேரவன் மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளம் வரை கேட்க அந்த இயக்குனர் செய்வதறியாமல் இறங்கி சென்று விட்டார் என்று ஷாலினி பாண்டே கூறினார். பெண்கள் குறிப்பாக சினிமாவில் பல நடிகைகள் சந்திக்கும் சவால்கள் இந்த மாதிரியாகவே இருக்கிறது. சில நடிகைகள் தன் வாழ்வாதாரத்திற்காக இப்படிப்பட்ட சூழ் நிலைக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இன்னும் அட்ஜெஸ்ட்மெண்ட் சினிமா மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் இருந்து கொண்டுதான் வருகின்றன. சமீபத்தில் கூட மலையாள சினிமாவில் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் பீதியில் இருந்தது. ஹேமா கமிஷன் என்ற அமைப்பு ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் ஆட்டம் காண வைத்ததை யாராலும் மறக்க முடியாது.