ஏர்போர்ட் போயும் அடங்கலயா!... இந்த ஷாலு ஷம்முவுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!...
சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு வந்தவர் ஷாலு ஷம்மு. சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.
எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. ஆனால், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி விமான நிலையம் சென்றிருந்த போது அங்கும் ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்வீட் கடை பன்னு போல உடம்பு!… பரவசமாக்கும் Body shape-ல் சந்தானம் பட நடிகை….
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இந்த பொண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா’ என கிண்டலடித்து வருகின்றனர்.