More
Categories: Cinema News latest news

விஜய் வீட்டில் நடிகர் சதீஷ்க்கு நேர்ந்த அவமானம் – வேடிக்கை பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்த தளபதி விஜய்

நடிகர் சதீஷ், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். நடிகராவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் சதீஷ். அதனால், சிவகார்த்திகேயன் நண்பராக சில படங்களில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இப்போது, முக்கிய காமெடி நடிகராக இருக்கிறார்.

Satish

முக்கிய படங்களில் நடித்தவர்

Advertising
Advertising

மெரினா, எதிர் நீச்சல், நையாண்டி, மான் கராத்தே, கத்தி, ஆம்பள, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், முத்தின கத்திரிக்கா, ரெமோ, பைரவா, தமிழ் படம் 2, கஜினிகாந்த், கொரில்லா, டெடி, அண்ணாத்தே, நாய் சேகர், ஹாஸ்டல் உள்ளிட்ட வெற்றி படங்களில், முக்கிய கேரக்டர்களில் சதீஷ் நடித்திருந்தார். இதில் கத்தி, பைரவா போன்ற படங்களில் விஜய் உடன் சதீஷ் நடித்திருந்தார். அப்போது, தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை, டிவி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சதீஷ் ரசிகர்கள் மத்தியில் கூறினார்.

விஜய் படங்களில் நடித்தேன்

நான், தளபதி விஜய் சாருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் அவரது வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு பலமுறை எனக்கு கிடைத்திருக்கிறது. அவரது வீட்டுக்கு சென்றால், அங்கு இருக்கும் ஊழியர்கள் ஸ்வீட், காரம் என ஒரு பவுலில் வைத்து ஏதாவது சாப்பிட கொண்டு வந்து தருவது வழக்கம்.
விஜய் வீட்டுக்கு சென்றேன்

எனது பர்த் டே அன்று, விஜய் சார் என்னை வீட்டுக்கு கூப்பிட்டதாக தகவல் வந்தது. உடனே நானும் விஜய் வீட்டுக்கு சென்றேன். விஜய் இருந்தார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். எனக்காக ஹேப்பி பர்த்டே சதீஷ் என எழுதி பர்த் டே கேக் எல்லாம் ரெடி செய்து விஜய் வைத்திருக்கிறார்.

Vijay

கேக்கை எடுத்துவரச் சொன்ன விஜய்

அப்போது அங்கிருந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம், ஏம்மா அந்த கேக்கை எடுத்துட்டு வாம்மா என்றார். உடனடியாக சென்ற அந்த அம்மா, என்னுடைய பர்த்டே கேக்கை எடுத்து, அவரே வெட்டி எனக்கு ஒரு பீஸை ஒரு கப்பில் வைத்து எடுத்து என்னிடம் கொண்டு வந்து தந்தார். அதில் சதீஷ் என்ற எழுத்துகளில் எஸ்ஏடி என்ற எழுத்துகள் மட்டுமே இருக்கிறது. விஜய் அப்படியே அந்த வேலைக்கார அம்மாவை என்ன சொல்வது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அந்த எஸ்ஏடி என்னுடைய நிலையை, சேடு என சொல்லியது போல் இருந்தது, என நகைச்சுவையாக கூறி இருக்கிறார் சதீஷ்.

Published by
elango

Recent Posts