என்னயவே கலாய்க்கிறீங்களா இருங்கடா!.. வெறித்தனமாக இந்த ஆண்டே கம்பேக் கொடுக்கும் ஷங்கர்.. என்ன படம்?
இயக்குனர் ஷங்கர் வாழ்க்கையிலேயே இந்தியன் 2 படத்தை மறக்க முடியாத அளவுக்கு அனைத்து தரப்பும் அந்த படத்தை கழுவி ஊற்றி விட்டனர். அந்தளவுக்கு அவுட் டேட்டடான கதையை வைத்துக் கொண்டு பல கோடி பணத்தை வேஸ்ட் பண்ணி விட்டார். 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எத்தனையோ நல்ல சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை எடுத்து இருக்கலாம் என்கின்றனர்.
இந்தியன் 3 திரைப்படம் வெளியானால் இந்தியன் 2 படம் புரியும் என ஷங்கர் தரப்பு தொடர்ந்து உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில், கலாய்த்தவர்களுக்கு ஷங்கர் இந்த ஆண்டே பதிலடி கொடுத்து கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளருடனான பிரச்சினையால் பாதியிலேயே படத்தில் இருந்து விலகிய அஜித்! தூக்கி நிறுத்திய நடிகர் யார் தெரியுமா?
நேற்று தெலுங்கில் ராயன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடைபெற்றது. தனுஷ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பிரபலங்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தில் ராஜு ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என அறிவித்து விட்டார்.
ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக முதல்வன் பாணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நிச்சயம் ஷங்கருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்..! இளையராஜாவைப் பாட வைத்த யேசுதாஸ்… அட அந்தப் பாடலா?
இந்தியன் 2 படத்தால் ஷங்கரால் சாதிக்க முடியாத 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை கேம் சேஞ்சர் சாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாகி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் தான் வரும் என தெரிந்ததும் ஷங்கர் மற்றும் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தின் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டு படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக கொடுக்கப் போவதாக தில் ராஜு கூறியுள்ளார். கேம் சேஞ்சர் படமும் ஷங்கருக்கு சொதப்பி விட்டால் அதன் பின்னர் மிகப்பெரிய இடி அவர் தலைமீது விழும் என்கின்றனர்.
இதையும் படிங்க: துளி கூட இஷ்டம் இல்லாமல் நடிச்ச ரஜினி! மொத்த படமும் டிராப்.. அப்புறம் எப்படி ஹிட்டாச்சுனு தெரியுமா?