சூப்பர் சினி!மா...நன்றி சிவகார்த்திகேயன்!...டாக்டர் படத்தை பாராட்டி தள்ளிய ஷங்கர்...

by சிவா |
shankar
X

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் தற்போதுதான் ரிலீஸ் ஆகியுள்ளது. அதுவும் ஓடிடி ரிலீஸ் என வெளியான செய்திகளை உடைத்து நேற்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

doctor2

கடந்த வருடம் 6 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு அதன் பின் ‘மாஸ்டர்’ வெளியாகி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது போல், தற்போது மீண்டும் 10 மாதம் கழித்து டாக்டர் திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வந்துள்ளது. அதுவும், குடும்பத்துடன் பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இப்படத்தை திரைத்துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் டாக்டர் படத்தை பாராட்டியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களுக்கு சிரிப்பு மருந்து போல டாக்டர் படம் வெளிவந்துள்ளது. நெல்சன் குமார் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படத்தில் உருவாக்கிய சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இப்படம் மீண்டும் கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சி’என டிவிட்டரில் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

Next Story