பர்த்டே பார்ட்டிக்கு மிஷ்கினை கழட்டிவிட்ட ஷங்கர்!.. வாயை வச்சிக்கிட்டு ஏழரை இழுத்தா இப்படித்தான்!..

by சிவா |
myskin
X

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் எடுத்ததால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை இயக்குவதே இவரின் ஸ்டைலாகிப்போனது. தொடர்ந்து காதலன், ஜீன்ஸ், இந்தியன் என வெரைட்டி காட்டினார்.

இவரின் திரைப்படங்களில் சமூகபற்று அதிகமாக இருக்கும். இந்தியன், அந்நியன், முதல்வன், 2.0 ஆகியவற்றில் இதை பார்க்க முடியும். 2.0 படத்திற்கு பின் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை துவங்கினார். தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் தில் ராஜூ இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் லியோ புரமோஷன்!.. 1000 கோடி டார்கெட். பக்கா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்..

இந்த படத்தில் இடம் பெற்ற 5 பாடல் காட்சிகளுக்கு மட்டும் ரூ.91 கோடி செலவு செய்துள்ளாராம் ஷங்கர். ஒருபக்கம் கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படமு அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது.

நேற்று ஷங்கர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், தனது நட்பு வட்டாரங்களுக்கு ஷங்கர் நேற்று மாலை சுமார் ரூ.75 லட்சம் செலவில் ஒரு பார்ட்டி கொடுத்தாராம்.

party

இதில், நடிகர் விக்ரம், விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், லிங்குசாமி, கவுதம் மேனன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்பாராஜ், எஸ்.ஜே. சூர்யா, சசி என பலரும் கலந்து கொண்டனர். மேலும், ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து நடிகர் ராம்சரணும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.

ஆனால், இயக்குனர் மிஷ்கின் இதில் கலந்துகொள்ளவில்லை. அவரும் ஷங்கரின் நட்பு பட்டியலில் இருப்பவர்தான். சமீபகாலமாக மிஷ்கின் சினிமா விழாக்களில் அநாகரீகமாக பேசுகிறார் என்கிற புகார் உள்ளது. எனவேதான், ஷங்கர் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: குத்துங்க எஜமான் குத்துங்க!.. அவர் எப்பவுமே அப்படித்தான்!.. ஆந்திரா போயும் ஏழரை இழக்கும் ஷங்கர்..

Next Story