கமலுடன் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி!. ஷங்கர் சொன்ன பதில்!... இப்ப வரைக்கும் நடக்கலயே!...

by சிவா |   ( Updated:2024-05-15 03:32:22  )
rajini kamal
X

எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு பின் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களாக மாறியவர்கள் ரஜினி - கமல் என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தனிப்பட்ட வாழ்க்கையில் அண்ணன் தம்பிகளாக பழகினார்கள் எனில், ரஜினியும் கமலும் இப்போது வரை நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் எப்படி மோதிக்கொண்டார்களோ அப்படித்தான் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் மோதிக்கொண்டார்கள். இப்போது வரை இது தொடர்கிறது. ரஜினியும் கமலும் பல நிகழ்ச்சிகளில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என காட்டிவிட்டனர். ஆனால், அவரின் ரசிகர்கள் மாறவில்லை.

இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு நெத்தியடி!.. சுசித்ராவுக்கு மட்டும் சுத்தி வளைக்கிறாரே திரிஷா?..ஏன்மா இப்படி!..

ரஜினி சினிமாவில் அறிமுகமாகும்போது கமல் ரசிகர்களிடம் பிரபலமான ஹீரோவாக இருந்தார். அவரை ஒரு ஸ்டாராகவே பிரமிப்புடன் பார்த்தார் ரஜினி. துவக்கத்தில் ரஜினி நடித்த பல படங்களிலும் கமல்தான் ஹீரோ. கமலின் வெளிச்சம் தன் மீது பட்டு ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும், தனக்கென ஒரு இடம் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்தான் ரஜினி. இது பலருக்கும் தெரியாது.

kamal rajini

ஆனால், இனிமேல் நாம் இணைந்து நடிக்க வேண்டாம் என கமல் சொன்னதை ஏற்றுக்கொண்டு தனியாக நடிக்க துவங்கினார் ரஜினி. அதுதான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. பைரவி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார் ரஜினி.

ஒருகட்டத்தில் கமலைவிட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரஜினி மாறினார் என்பதுதான் சினிமா வரலாறு. 40 வருடங்களாக அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கிறது. இனிமேல் அது நடக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

ஆனால், ரஜினிக்கு அந்த ஆசை இருந்தது உண்மை. சிவாஜி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அப்படத்தின் இயக்குனர் ஷங்கரிடம் ‘நானும் கமலும் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?.. உங்களால ஒரு கதையை உருவாக்க முடியுமா?.. நான் கமல்கிட்ட பேசுறேன்’ என சொல்லி இருக்கிறார்.

அதற்கு பதில் சொன்ன ஷங்கர் ‘நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா அந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் கதை அமைய வேண்டும். அதேபோல், அந்த கதை உங்கள் இருவருக்கும் பொருந்துவது போல் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்’ என ஷங்கர் சொன்னாராம். ஆனால், இப்போது வரை நடக்கவில்லை என்பதுதான் ஏமாற்றம்.

Next Story