முடிவுக்கு வந்தது பஞ்சாயத்து.. டிசம்பரில் தொடங்குகிறது தரமான சம்பவம்!

Published on: November 2, 2021
sankar
---Advertisement---

உலகநாயகன் கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த படம் ‘இந்தியன்’. இதில் கமல் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். கமலுக்கு ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பெரிய ப்ளஸ் என்றாலே அது ஏ.ஆர்.ரகுமான் இசைதான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 24 வருடத்திற்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ஷங்கர் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தநிலையில் இரண்டாம் பாகத்திற்கு அனிருத்துடன் கைகோர்த்துள்ளார் ஷங்கர்.

கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்புடன் ஷங்கருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.

indian 2
indian 2

இதையடுத்து இந்த பஜாயத்து கோர்ட்டுக்கு சென்றது. நீண்ட இழுபறிக்குப் பின் சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. இதைடித்து ஷங்கர் இப்படத்தை விரைந்து முடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. நவம்பர் மாதத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பரில் இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளாராம் ஷங்கர். இந்த செய்தி கமல் ரசிகர்கள் காதில் தேனை வார்த்துள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment