பிரமாண்ட இயக்குநர் மகள்… ஸ்கூலில் படிக்கும்போதே இப்படியா? – ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்

Published on: June 1, 2023
---Advertisement---

தமிழ் சினிமா இயக்குநர்களில், பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். ஷங்கர் இயக்கிய தமிழ் படங்கள், தமிழக சினிமா வரலாற்றில், மெகா ஹிட் படங்களாக பேசப்பட்டவை. குறிப்பாக இந்தியன், அந்நியன், ஐ, ஜெண்டில்மேன், முதல்வன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இப்போது அவரது மகள் அதிதி ஷங்கரும் சினிமா களத்தில் இறங்கி விட்டார்.

Adithi

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்த விருமன் படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இப்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முதல் படத்தில் அதிதி ஷங்கர் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், மாவீரன் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிதி ஷங்கர் அதிகமாக விளம்பர படங்களில் நடிக்கிறார். டிவி விளம்பரங்களில், பல வேளைகளில் இவரது முகம்தான் வருகிறது. டாக்டருக்கு படித்த அதிதி ஷங்கர், ஆக்டராக இருக்கிறார் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

Adithi

சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் பேசிய அதிதி, தன்னை பற்றி மிக வெளிப்படையாக பேசி இருக்கிறார். ‘ சின்ன வயதில், நிறைய குறும்புகள் செய்வேன். ஆனால், அதற்காக சீக்கிரமாக அம்மாவிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால், எப்போதாவது சிக்கி விடுவோம் என்ற பயத்தில் இருப்பதை விட, சீக்கிரமாகவே சிக்கிக்கொண்டால் நல்லது என்று தோன்றும், இப்படி குறும்பு செய்து, பலமுறை அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். அம்மாவிடம் அடி வாங்காமல் எந்த குழந்தையும் வளர முடியாது. ஸ்கூலில் படிக்கும் போது நான், சரியான வாலு, அராத்து என்பதை எல்லாம் தாண்டி ரவுடி என்பதுதான் உண்மை. நிறைய சண்டை போட்டிருக்கேன், என்று கூறி இருக்கிறார்.

Adithi

அப்பாவிடம், நான் நடிக்கிறேன் என்று சொன்ன போது முதலில் யோசித்தார். நான் பாடுவதில்தான் விருப்பம் என ஆரம்பத்தில் அவரிடம் கூறிய நிலையில், இப்போது நடிக்கிறேன் என்றதால், அப்பா யோசித்தார். அதன்பிறகு, ‘ஒரு அப்பாவாக உன்னை நான் நடிப்பதற்கு அனுமதிக்க முடியாது என எளிதாக சொல்லி விடுவேன். ஆனால், ஒரு இயக்குநராக நான் அப்படி சொல்லி விட முடியாது. நீ விரும்பினால் நடி’ என்று எனக்கு அப்பா அனுமதி கொடுத்தார் என்ற தகவலையும் அதிதி ஷங்கர் பகிர்ந்து இருக்கிறார்.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.