Connect with us

பறக்கும் எஸ்.எம் எஸ்.! என் வீட்ல இப்போ விஷேசம் இல்ல.! வருத்தத்தில் ஷங்கர்.?!

Cinema News

பறக்கும் எஸ்.எம் எஸ்.! என் வீட்ல இப்போ விஷேசம் இல்ல.! வருத்தத்தில் ஷங்கர்.?!

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்றால் அது நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர் தான். தற்போது நாம் கொண்டாடும் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலிக்கு எல்லாம் முன்னோடி அவர் தான் என்பது நிதர்சனமான உண்மை. அவரின் கடைசி சில படங்கள் வேண்டுமானால் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் இருக்கலாம். ஆனால், விரைவில் மீண்டும் வருவார் என்பது சினிமா ரசிகர்களின் நம்பிக்கை.

இவர் படங்களில் தான் பிரமாண்டம் என்று பார்த்தால், அவரின் மகளின் கல்யாணத்தையும் ஊரே மெய்ச்சும் வண்ணம் படு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டார். அதுக்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருந்தார். ஒரு பத்திரிகை செலவு மட்டுமே 8 ஆயிரத்து 500 ரூபாயாம். இதனை அச்சடித்து பல திரை பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்.

மேலும் சினிமாவில் பிரமாண்ட செட் அமைக்கும் முத்துராஜ் அவர்களை அழைத்து சுமார்  6 கோடி ரூபாய் செலவில் ஒரு செட் அமைக்க கூறியிருந்தாராம். பல பிரபலங்களே அலாரம் வைத்து அன்றைய தினம் ஷங்கர் மகளின் வரவேற்பு வர காத்திருந்தவர்களுக்கு தற்போது எஸ்.எம்.எஸ் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம்.

இதையும் படியுங்களேன் – அடேங்கப்பா.! விஜயகாந்தும், சூர்யாவும் இணைந்து இத்தனை படங்கள் நடித்துள்ளனரா.?! லிஸ்ட் இதோ..,

ஆம், எனோ சில காரணங்களால் ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தகவல் ஷங்கர் தரப்பில் இருந்து பறக்கிறதாம். மேலும், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள செட் வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாம். அப்படி என்னதான் நடந்தது என்று இன்னும் தெரியவில்லையாம். விரைவில் உறுதியான தேதி பற்றிய தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top