ஒரு பாட்டுக்கு அத்தனை கோடி செலவா?!- இன்னும் திருந்தலயா இயக்குனர் ஷங்கர்?...
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். ஒரு பாடலுக்கு கூட சில கோடிகள் செலவு செய்து தயாரிப்பாளர்களை கதற விடுவார். இவர் எடுத்த பல பாடல்கள் பல கோடிகளை முழுங்கியிருக்கிறது.
இதனால் இவர் படம் இயக்கும்போது இவருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. அதிக செலவில் படங்களை இயக்குவதால் தயாரிப்பாளர்களுக்கும் அதிக லாபம் கிடைக்காமல் போகிறது.
இந்தியன் 2 திரைப்படம் கூட சில பிரச்சனைகளால் முடங்கியுள்ளது. லைகா நிறுவனம் கூறும் கட்டுப்பாடுகள் ஷங்கருக்கு பிடிக்கவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.
எனவே, தெலுங்கில் கோடிகளை கொட்டி படம் எடுக்கும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவை அணுகினார் ஷங்கர். ராம்சரணை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தை எடுப்பது என முடிவெடுத்து தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு ரூ.23 கோடி செலவு செய்துள்ளாராம் ஷங்கர். இது தெலுங்கு திரையுலகினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தனைக்கும், இவ்வளவு பட்ஜெட்டில் படத்தை எடுத்து கொடுத்துவிட வேண்டும் என அக்ரிமெண்ட்டில் ஷங்கரிடம் கையெழுத்து வாங்கி விட்டுத்தான் அவரை ஒப்பந்தம் செய்தார் தில் ராஜூ.
ஷங்கருக்கு அடுத்த பஞ்சாயத்து ரெடியா என்பது ராம்சரண் படம் முடியும் போதுதான் தெரியவரும்..