மிஸ்டர் பிரம்மாண்டம் ஷங்கர் ரிஸ்க் எடுத்த டாப் 5 பாடல்கள்... ஓ இந்த படமும் இருக்கா?
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படைப்புக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். அவரின் படத்தின் காட்சிகளில் மட்டும் இல்லை பாடல்களுக்கு அது நடக்கும் லோகேஷன்களுக்குமே அத்தனை பெரிய முக்கியத்துவம் கொடுப்பார். அப்படி அவர் படங்களில் வந்த டாப் 5 சீன்களும் அதற்கு அவர் எடுத்த ரிஸ்கும் தான் இதில் பார்க்க போகிறோம்.
இந்தியன்:
இந்த படத்தில் எல்லா காட்சிகளிலும் மாஸ் காட்டி இருப்பார் கமல். போனா லேட்டஸ்ட் செல்லுலார் போனா பாடல் ஒரு கப்பலில் படமாக்கப்பட்டு இருக்கும். அந்த கப்பல் தி பவுண்ட்டி என்ற படத்திற்காக உருவாக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பு முடிந்ததும் அதை சுற்றுலா பயணிகளுக்கு காட்சிக்காக வைத்து விட்டனர். அதில் முதன்முதலாக படமாக்கப்பட்ட பாடல் இது தான்.
செஞ்சிக்கோட்டையில் தான் கப்பலேறி போயாச்சு பாடல் படமாக்கப்பட்டது. இங்கு நடந்து தான் போக வேண்டும். அதற்கே மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆனால் ஷங்கர் தனது மொத்த படக்குழுவினையும் மேலே கூட்டிக்கொண்டு போய் இந்த பாடலை படமாக்கி இருப்பார்.
ஜீன்ஸ்:
இந்த படத்தின் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய அளவில் இன்று பேசப்பட்டு வருகிறது. இதில் ஹராஹரப்பா பாடல் அமெரிக்காவில் இருக்கும் வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டது. இதில் முதலில் வரும் எம்.ஜி.எம் கிராண்ட் ஹோட்டல் ஒரு மினி அமெரிக்கா என்றே சொல்ல வேண்டும். இதில் 6000க்கும் அதிகமான ரூம்களுடன் தீம் பார்க் போன்ற எல்லா வசதிகளும் இருக்கிறது. இதை தொடர்ந்து இந்த பாடல் ஒரு நெருப்பு பள்ளத்தாக்கில் படமாக்கப்பட்டது.
பூவுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம் பாடலுக்காக ஷங்கர் தனது குழுவுடன் கிட்டத்தட்ட 17,495 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள். இந்த பாடலில் இருக்கும் எல்லா அதிசயங்கள் முன்பும் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடி இருப்பர்.
பாய்ஸ்:
சித்தார்த் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான அலே அலே பாடல் முதல் பகுதி ஒரு பிரபலமான ஜெயிலில் படமாக்கப்பட்டு இருக்கும். இப்போ மியூசிமாக இருக்கும் போர்ட் ஆர்தர் 1880களில் சிறையாக இருந்தது.
அந்நியன்:
அந்நியன் படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல். மலேசியாவில் உள்ள பெட்ரானஸ் ட்வின் டவரில் இந்த பாடல் படமாக்கப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிக உயரமான கட்டடம் என்பது முக்கியமான சேதி. இந்தியாவில் இருந்து இந்த டவரில் இருந்து முதன்முதலாக எடுக்கப்பட்ட படம் அந்நியன்.
இந்த பாடலின் இரண்டாம் பகுதி எல்லாமே கோலாலம்பூர் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. உலகத்திலேயே ரொம்பவும் பரபரப்பாக இயங்கப்படும் இந்த விமான நிலையத்தில் ஷங்கர் மிகுந்த சிரமப்பட்டே இந்த பாடலை படமாக்கி இருப்பார்.
எந்திரன்:
இப்படத்தில் இடம்பெற்ற காதல் அணுக்கள் பாடல் ப்ரேசிலில் இருக்கும் ஒரு பூங்காவில் படமாக்கப்பட்டது. பாலைவனம் போல இருந்ததற்கு ஒரு சுவாரஸ்ய காரணம் இருக்கிறதாம்.
ப்ரேசிலில் 3 லட்சம் அதிக பரப்பளவை கொண்ட இந்த பூங்காவில் வருடத்தின் முதல் சில மாதங்கள் அதிகமான மழை பொழிவு இருக்குமாம். அதில் மழை நீர் அங்குள்ள மணல் பரப்பில் தேங்கி ஏரிகளாக காட்சியளிக்கும்.
இப்படி ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எல்லா பாடல்களிலுமே இருக்கும் லோகேஷன்களுக்கு கூட அதிக மெனக்கெட்டு யாரும் அறியாத இடத்தினை கண்டுபிடித்து அதில் படப்பிடிப்பை வைப்பாராம்.