Connect with us

ஷங்கர் படத்தையே நான் வேணாம்னு சொன்னேன்.! இந்தாளுக்கு எவளோ தில்லு பாத்தீங்களா.?!

Cinema History

ஷங்கர் படத்தையே நான் வேணாம்னு சொன்னேன்.! இந்தாளுக்கு எவளோ தில்லு பாத்தீங்களா.?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் வெறுமனே பலகோடி செலவு செய்து காசை காரியாக்காமல், அந்த கதைக்கு என்ன தேவையோ அதனை செய்வார். அந்த கதையும், காட்சியமைப்புகளும் அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். அதற்கு சமரசமில்லாமல் படமாக்குவார்.

அதனால் அவரது படங்கள் பிரமாண்டமாக இருந்தாலும், ஏதும் நம் கண்களை உறுத்தாது. படமும், ரசிகர்கள் ரசிக்கும் படி அமைந்துவிடும். அதனால், அவரது படங்களில் நடிக்க பிரபல நடிகர்கள் கூட ஆர்வமாக இருப்பார்கள். ஷங்கர் படம் என்றால், பெரிய ஹீரோக்கள் தங்கள் ஒத்துக்கொண்டுள்ள படங்களை கூட ஒதுக்கிவைத்து விட்டு வருவார்கள்.

ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் ஷங்கர் படத்தில் நடிக்க ஒருவர் மாட்டேன் என கூறியுள்ளாராம். அவர் வேறு யாருமல்ல ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஜீன்ஸ் பட நாயகன் பிரசாந்த் தான். இந்த படத்திற்கு முன்னரே ஷங்கர் பிரசாந்தை தொடர்பு கொண்டு காதலன் படத்திற்காக நடிக்க கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லையா.?! முதலில் ரஜினி அடுத்து விஜயகாந்த்.!

அப்போது தான் பிரசாந்த் வளர்ந்து வரும் நடிகர். அந்த சமயம் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தாராம் . அந்த பாட ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் கொடுத்ததால்,  காதலன் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால் அந்த படத்தில் பிரசாந்த் நடிக்கவில்லை.

பிறகு காதலன் படத்தில் பிரபு தேவா நடித்து கொடுத்தார் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பின்னர் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் உடன் இணைந்து பணியாற்றினார் ஷங்கர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top