அந்த கதை வேண்டாம்...வேற கதை ஓகே...ஷங்கர் நிலமை இப்படி ஆகிப்போச்சே...
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். ஆனால், இவர் இயக்கும் திரைப்படங்களின் கதை தன்னுடையது எனவும், அதை ஷங்கர் திருடிவிட்டார் எனவும் சிலர் அவ்வப்போது வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் தொடர்ந்து வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
அதன்பின் அவர் தனது அந்நியன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். ரன்வீர் சிங் நடிக்க இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கதைக்கு தயாரிப்பாளர் என்கிற வகையில் அப்படத்தின் ரீமேக் உரிமை எனக்கே சொந்தம் என அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு குடைச்சல் கொடுத்தார்.
ஒருபக்கம், ஷங்கர் ராம்சரனை வைத்து தெலுங்கு, தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு அந்நியன் ரீமேக்கை ஷங்கர் பாலிவுட்டில் இயக்கவிருந்தார். ஆனால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் நீதிமன்றத்துக்கு சென்றால் இது சிக்கலாகும் என்பதால், தற்போது வேறு ஒரு கதையை ஷங்கர் தயார் செய்து ரன்வீர் சிங்கிடம் கூறினாராம். அந்த கதை ரன்வீர் சிங்குக்கும் பிடித்துப்போக ஓகே சொல்ல்விட்டாராம்.
ஏற்கனவே, இந்தியன் 2 விவகாரத்தில் லைக்காவுக்கும், ஷங்கருக்கும் முட்டிகொண்டு நீதிமன்றம் வரை சென்றது. இந்தியன் 2வை முடிக்காமல் ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்கக்கூடாது என லைக்கா நிறுவனம் நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.