வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்... ஷங்கர் முதல்ல தேர்ந்தெடுத்தது இளையராஜாவாம்..!

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏன்னா இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் காம்போ தான் இதுவரை சூப்பர்ஹிட் அடித்துள்ளது. அதிலும் இந்தியன் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

பாடல்கள், பிஜிஎம் என ஏ.ஆர்.ரகுமான் கலக்கியிருப்பார். அந்த அளவு இந்தியன் 2 இல்லாததால் ரசிகர்கள் அனைவரும் அனிருத்தை சமூக வலைதளங்களில் டாரு டாராக கிழித்து தொங்க விடுகின்றனர்.

இதையும் படிங்க... https://cinereporters.com/mythri-movie-makers-catch-the-goat-movie-telugu-rights/

ஜென்டில்மேன், காதலன், சிவாஜி, ஐ, 2.ழு படங்களுக்கு எல்லாம் ஏ.ஆர்.ரகுமான் தான் மியூசிக். இவரது படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தால் அதில் 50 சதவீதம் ஏ.ஆர்.ரகுமானுக்குத் தான் போய்ச்சேரும். அந்நியன்,

நண்பன் என இரு படங்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் மியூசிக். அந்நியன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் லார்ட் ஆப் தி ரிங்ஸ் வேலையா வெளிநாட்டில் இருந்ததால் அவரால் இசை அமைக்க முடியவில்லை. அதே போல நண்பன் குறைந்த பட்ச பட்ஜெட் என்பதால் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார்.

ரகுமானை ஷங்கர் எடுத்ததுமே தேர்ந்தெடுக்கவில்லையாம். ஜென்டில் மேன் படத்திற்கு முதலில் இசை அமைக்க இருந்தவர் இளையராஜா தான் என்று முடிவு பண்ணினாங்க.

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இளையராஜாவோட அப்பாயின்மென்ட்டையே ஷங்கருக்கு வாங்கிக் கொடுக்கிறார்.

ஷங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் இளையராஜாவின் பிரசாத் ஸ்டூடியோவுக்குச் செல்கின்றனர். ஷங்கரின் உதவி இயக்குனர்களாக வசந்தபாலன், ஏ.வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல் என பலரும் அப்போது ஷங்கருடன் வருகிறார்கள்.

அப்போது ஷங்கருக்கு மனது உறுத்திக் கொண்டே இருந்ததாம். வழியில் இறங்கி ஒரு டீக்கடையில் டீ குடித்தாராம். இந்தப் படத்துக்கு இளையராஜாவை விட வேற ஒருத்தரை மியூசிக்கிற்குப் போடலாமேன்னு நினைச்சாராம்.

Gentleman

Gentleman

ரோஜா படத்துக்கு அப்போது மியூசிக் போட்டவர் ஏ.ஆர்.ரகுமான். அவரையே இந்தப் படத்திற்குப் போடலாம் என சட்டென முடிவு எடுத்து வண்டியை ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு விடுன்னு போனார். ரகுமானிடம் அப்பாயின்மெண்டும் வாங்கவில்லையாம்.

அப்போது ஜென்டில்மேனின் முழு கதையையும் சொன்ன ஷங்கர், ரகுமானிடம் சொல்லி இருக்கிறார். உடனே 3 பாடல்களையும் ரெடிமேடாகப் போட்டுக் கொடுத்தாராம் ரகுமான். அப்படித்தான் அவர் ஜென்டில்மேன் படத்திற்குள் வந்தார். அந்தப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் பிசியாகி விட்டார்.

இளையராஜாகிட்ட ஏன் போகலேன்னா ஷங்கருக்கு இதுதான் முதல் படம். அவர் நினைச்ச மாதிரி இளையராஜா மாதிரி சீனியரிடம் போய் வாங்குறது சுலபமல்ல என்று நினைத்தாராம். இளையராஜா சில நேரம் இதான்யா டியூன். எடுத்துட்டுப் போன்னு கோபத்தில் சொல்லி விடுவாரோ என்று நினைத்தாராம்.

அதனால் தான் இளையராஜாவை விட்டு ஏ.ஆர்.ரகுமானிடம் வந்தார். ஆனால் ரகுமான் வேற லெவலைக் காட்டி விட்டார். அதே நேரம் ஏ.ஆர்.ரகுமானை விட்டுவிட்டு அனிருத்திடம் சென்றுள்ளார். இப்போது அவரோ பல சர்ச்சையில் சிக்கி விட்டார். இனி ஷங்கர் என்ன செய்யப் போகிறார்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Articles

Next Story