
Cinema News
நான் எழுதிய கதையை இதனால் தான் ஷங்கருக்கு கொடுத்தேன்… டாப் இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!
Published on
By
Shankar: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு தகவல் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கும் நிலையில், கோலிவுட்டில் கூட இப்படி ஆட்கள் இருக்கிறார்களா என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும். அதில் ரோபோ திரைப்படம் பேன் இந்தியாவாக மாறி மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.
இதையும் படிங்க: ஜப்பானுக்கே காவடி எடுத்தாலும் படம் ஜெயிக்காதுடி!.. கார்த்தியை காவு வாங்கிய ஜப்பான்.. விமர்சனம் இதோ!..
இதையடுத்து அந்நியன், 2.ஓ திரைப்படங்களுமே மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. தற்போது தமிழில் இந்தியன் படத்தினை இயக்கி வருகிறார் ஷங்கர். பல வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் நீளம் கருதி இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அடுத்த வருடம் ரிலீஸாக இருக்கும் முதல் பாகத்தின் இண்ட்ரோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தினையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை எழுதியவர் ஜிகர்தண்டா படத்தினை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ். இந்த கதையை அவர் எழுதிய போது சகாக்கள் இந்த கதை ஷங்கர் இயக்கினால் வேற லெவலில் இருக்கும் என்றார்களாம்.
இதையும் படிங்க: ஏறி வந்த ஏணிய எட்டி உதைச்சிட்டாங்க!. இதுதான் சினிமா!.. சூர்யா – கார்த்தி பற்றி புலம்பும் அமீர்….
அதனால் கொஞ்சமும் யோசிக்காத கார்த்திக் சுப்புராஜ் ஷங்கரிடம் இந்த கதையை சொன்னாராம். அவருக்கும் ரொம்பவே பிடித்து போக இந்த கதையை ராம்சரணிடம் சொல்லி ஓகே வாங்கிய பிறகு திரைக்கதையை மட்டுமே ஷங்கர் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் மொத்தமாக முடிந்து இருக்கும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Actress Jyothika: தமிழ் சினிமாவில் 2000களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி,...
Kanandhasan: தமிழ் சினிமாவில் தனது பாடல்களின் மூலம் மக்களை கட்டி போட்டவர் கவிஞர் கண்ணதாசன். இவர் பல திரைப்படங்களுக்கு பல்வேறு பாடல்களை...
Archana: நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புயல் காரணமாக எலிமினேஷன் கிடையாது என கமல் அறிவித்தார். அது ஒரு சில பேருக்கு...
Silambarasan: தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிலம்பரசன். மாஸ்டராக தொடங்கிய இவர் லிட்டில் சூப்பர்ஸ்டார்...
திரையுலகில் பல நடிகர்கள் வருகிறார்கள்.. போகிறார்கள். ஆனால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே....