குருவை ரிஜெக்ட் செய்த தயாரிப்பாளர்… நைசா பேசி கரெக்ட் பண்ணிய ஷங்கர்…

ஷங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் திரைப்படம்தான் ஜென்டில்மேன். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலாவும் நடித்திருந்தார்.
முதல் படம் என்றாலும் இப்படம் ஷங்கருக்கு வெற்றியை தேடி தந்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தினை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ஷங்கர் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக இப்படம் விளங்கியது.ஷங்கர் ஆரம்பத்தில் துணை இயக்குனராகதான் இருந்துள்ளார். இயக்குனர் பவித்திரனிடம் அசோஸியேட் டைரக்டராக இருந்துள்ளார். அதே சமயம் இயக்குனர் வெங்கடேஷ் பவித்ரனிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அப்போது ஷங்கருக்கும் வெங்கடேஷுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க:சண்டையா? அஜித்துக்கும் தனக்கும் இருக்கிற bonding பற்றி வாய்திறந்த பிரசாந்த் – இவங்கள போய் இப்படி நினைச்சிட்டோமே
ஒரு நாள் இயக்குனர் பவித்ரன் சங்கரை அழைத்து நீ தனியாக படம் இயக்கலாம். அந்த அளவு நீ அனுபவத்தை பெற்றுள்ளாய் என கூறினாராம். அப்போது ஷங்கரும் வெங்கடேஷும் இணைந்து ஒரு திட்டம் போட்டனர். இருவரும் இணைந்து தனியாய் படம் இயக்கலாம் என யோசித்து படத்தின் கதையையும் எழுதினர்.
ஷங்கர் ஜென்டில்மேன் படத்திற்கு முன் மற்றொரு கதையை தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அக்கதையை அனைத்து தயாரிப்பாளர்களும் நிராகரித்து விட்டனராம். அப்போது வெங்கடேஷ் ஷங்கரிடம் அந்த கதையை நாம் அப்புறமாக படமாக்கலாம். இப்போது கமர்ஷியல் கதை ஒன்றை தயார் செய்யலாம் என கூறினாராம். அப்போது ஷங்கரும் ஜென்டில்மேன் கதையை எழுதியுள்ளார்.
இதையும் வாசிங்க:திருட்டு கதையில் நடித்து திணறிய பிரபுதேவா..! கடைசியில் சூப்பர்ஸ்டார் உதவியால் எஸ்கேப் ஆன சம்பவம்..!
அந்த நேரத்தில் இயக்குனர் பவித்ரன் சரத்குமார் நடிப்பில் ஐ லவ் இந்தியா திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தாராம். அப்படத்தினையும் குஞ்சுமோன்தான் தயாரித்தாராம். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனகசப்பினால் அப்படத்திலிருந்து குஞ்சுமோன் விலகிவிட்டாராம். அதனால் கோபம் கொண்ட குஞ்சுமோன் கண்டிப்பாக ஒரு வெற்றிபடத்தை கொடுத்தே ஆகவேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
அப்போது அவர் இயக்குனரை தேடி கொண்டிருந்த விஷயம் வெங்கடேஷின் காதிற்கு வர அவரும் ஷங்கரிடம் நாம் அவரை சந்திக்கலாம் என கேட்டுள்ளார். அப்போது ஷங்கர் தனது குருவான பவித்ரனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சினைகள் உள்ளது. அவரிடம் நான் சென்று படம் பண்ணினால் அது நன்றாக இருக்காது என எண்ணியுள்ளார். ஆனால் வெங்கடேஷ் அவரை கண்டிப்பாக சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்போது குஞ்சுமோனை சந்தித்த ஷங்கர் திரும்பி வரும் போது அவ்வளவு சந்தோஷமாக வந்தாராம். குஞ்சுமோன் ஷங்கரின் படத்தினை தயாரிக்க ஒத்து கொண்டதோடு அப்படத்திற்கான முதல் கட்ட தொகைக்காக காசோலையையும் ஷங்கரிடம் கொடுத்துள்ளார். இவ்வாற்று உருவானதுதான் ஷங்கர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம்.
இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயன் தப்பு செய்யாமையா அமைதியா இருக்காரு… மறுப்பு சொல்லணும்ல… இமானை மிரட்டலாமா?