
Cinema News
Mr.பிரமாண்டம் ஷங்கர் பற்றி தெரியாதா.?! பழைய ரெக்கார்ட்ஸ பாருங்க.. வாய்பிளந்த தெலுங்கு சினிமா.!
பெரிய பெரிய ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை செழிக்க வைத்த முன்னணி இயக்குனர்களுக்கு தற்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி என சிலர் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருக்கின்றனர்.
இதில் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பளார் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படம் அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.
இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இன்னும் இப்பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. ஆனால் அதற்குள் படத்தின் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் பெரிய விலைக்கு பேசப்பட்டுள்ளதாம்.
அதன்படி, இப்படத்தின் அனைத்து மொழி டிஜிட்டல், தொலைக்காட்சி உரிமம் மாட்டும் ஜீ நிறுவனம் 300 கோடி விலை பேசி வாங்கியுள்ளதாம். இன்னும் தியேட்டர் உரிமம் இருக்கிறது. எப்படியும் படத்தின் பிசினஸ் ரிலீசுக்கு முன்பு குறைந்தது 600 கோடி தயாரிப்பாளருக்கு சம்பாதித்து கொடுத்து விடும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – 1000 ரூபாய் அட்வான்ஸ் போதும்.! இது தான் சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் வெற்றி ரகசியம்.!
தெலுங்கு திரையுலகம் இப்படி ஒரு பிரமாண்ட வியாபாரத்தை ராஜமௌலியின் படங்களுக்கு மட்டுமே பார்த்துள்ளனர். அவர்களுக்கு நம்ம Mr.பிரமாண்டம் ஷங்கர் பற்றி இப்பொது தான் முழுதாக தெரிய ஆரம்பித்து இருக்கும் என கூறுகிறார்கள் நம்ம தமிழ் திரையுலகினர். தெலுங்கு படத்தை முடித்த கையேடு இந்தியன் 2வை கையில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் பேரானந்தம் கொள்வார்கள். அதற்கான அறிவிப்பு எப்போது வரும் என பார்க்கலாம்.