Connect with us
banner

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுத்திருங்க.. பிரமாண்ட இயக்குனரை மிரள வைத்த மக்கள் செல்வன்.!

Cinema News

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுத்திருங்க.. பிரமாண்ட இயக்குனரை மிரள வைத்த மக்கள் செல்வன்.!

சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் மாமனிதன். இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாக வில்லை. தென் மேற்கு பருவ காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன

அதனை தொடர்ந்து இந்த மாமனிதன் திரைப்படம் ரிலீசாகி உள்ளதால் படத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருப்பதும், யுவன் மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர் என்பதும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதில் பல்வேறு திரைபிரபலங்கள்  கலந்துகொண்டார். இந்நிலையில் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் பார்த்துள்ளார்.

இதையும் படியுங்களேன் –  வாழ்நாளில் காணாத தட்சணை.! நயன்தாரா திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் மலைக்க வைக்கும் சம்பளம்.!?

பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘  நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி மனதை வருடும் படி சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் நடிப்பு தேசிய விருது பெரும் அளவுக்கு இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா நல்ல இசையை கொடுத்துள்ளனர்.’ என மனதார பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top