ரஜினிக்கு எழுதுன சீன்!. அசால்ட்டு பண்ண கமல்!.. ஷங்கர் பகிர்ந்த சீக்ரெட்!...

by சிவா |
shankar
X

shankar

சில சமயம் இயக்குனர்கள் ஒரு ஹீரோவாவை மனதில் வைத்து ஒரு படத்தின் கதையை எழுதுவார்கள். ஆனால், சில சூழ்நிலைகளால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் வேறு நடிகர் அந்த கதையில் நடிக்க நேரிடும். எனவே, ஒரு நடிகருக்கு பொருத்தமாக எழுதிய காட்சியை வேறு நடிகருக்கு ஏற்றது போல் இயக்குனர் மாற்ற வேண்டி வரும். திரையுலகில் இது பலமுறை நடந்துள்ளது.

இதை அதிகமாக சந்தித்தது இயக்குனர் ஷங்கர்தான். இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தின் கதை சரத்குமாரிடம் முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை. அதன்பின் கமலிடம் சொல்லப்பட்டது. கமலுக்கும் அக்கதையில் நடிக்க விருப்பமில்லை. அதன் பின்னர்தான் அர்ஜூன் அந்த படத்தில் நடித்தார்.

kamal

அதேபோல், ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க விருந்தது அஜித். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போல பிரசாந்த் நடித்தார். அதேபோல், எந்திரன் படத்தில் கதைக்கு கமலை மனதில் வைத்துதான் திரைக்கதை எழுதினார் ஷங்கர். கமலை வைத்து போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், அதில் ரஜினி நடித்தார். அதேபோல், இந்தியன் திரைப்படத்திலும் ரஜினியை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார். ஆனால், அப்படத்தில் கமல் நடித்தார்.

இந்த படம் பற்றி ஒரு பேட்டியில் பேசிய ஷங்கர் ‘இந்தியன் படத்தில் ஒரு காட்சியில் சிபிஐ அதிகாரி நெடுமுடி வேணு கமல்தான் கொலைகளை செய்தார் என கண்டுபிடித்து அவரின் வீட்டிற்கு செல்வார். அப்போது கமல் அவரை தாக்கிவிட்டு ஸ்டைலாக தலைமுடியை கோத வேண்டும். இது ரஜினியை வைத்து நான் எழுதிய காட்சி. இதை கமலிடம் எப்படி சொல்வது? அவர் எப்படி எடுத்துக்கொள்வார்? என யோசித்து அவரிடம் சொன்னேன். அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், காட்சியை எடுக்கும் போது அதை செய்தார். ஆனால், அதில் அந்த கதாபாத்திரம்தான் தெரிந்தது. அவரது ஸ்டைலில் அழகாக செய்தார். அதில், ரஜினியை பார்க்கவே முடியாது. அதுதான் கமல்’ என ஷங்கர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: சிம்புவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே ‘பத்து தல’ படம் தான்!.. என்ன விஷயம் தெரியுமா?..

Next Story