ஷங்கர் - ராம்சரண் படத்துல இதான் கதையா?.. இதை விஜயகாந்த் அப்பவே பண்ணிட்டாரே!....

by சிவா |
sankar
X

தமிழில் ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், காதலன், ஜீன்ஸ், எந்திரன், 2.0 என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் பல பஞ்சாயத்துகளால் முடங்கி கிடக்க, அதை அப்படியே விட்டுவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்று ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க துவங்கியுள்ளார்.

இது அரசியல் தொடர்பான கதை எனக்கூறப்பட்டது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஒரு முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஒன்லைன் கதை வெளியே கசிந்துள்ளது. ராம்சரணுக்கு இப்படத்தில் தேர்தல் கமிஷனர் கதாபாத்திரமாம். ஒரு தேர்தல் அதிகாரி நினைத்தால் என்னென்ன மாற்றங்களை கொண்டு வருவார் என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இந்தியாவில் டி.என்.சேஷன் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பரபரப்பை உண்டாக்கினார். அதுபோன்ற வேடத்தில்தான் ராம் சரண் நடிக்கவுள்ளாராம்..

sankar

இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில் ‘இது தென்னரசு படத்துலயே விஜயகாந்த் பண்ணிட்டார்’ என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தென்னரசு படத்தில் விஜயகாந்த் தேர்தல் கமிஷனராக நடித்திருந்தார். படத்தின் இறுதிகாட்சியில் யாரும் ஓட்டு போட வேண்டாம் என அவர் கூறியதை கேட்டு தமிழகத்தின் எந்த தொகுதியிலும் ஒரு ஓட்டு கூட பதிவாகாதது போல் காட்சிகளை அமைத்திருப்பார்கள்.

ஆனால், ஷங்கர் இதில் வேறு ஏதேனும் செய்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.

Next Story