Connect with us

Cinema News

சினிமான்னா உனக்கு என்னன்னு தெரியுமா… கண்டபடி திட்டிய ஷங்கர்… கதறி அழுத பரத்..

தொடக்கத்தில் நடனத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சிபெற்று வந்த பரத், ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமனார். “பாய்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து “காதல்” திரைப்படத்தில் நடித்த பரத், அத்திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

“காதல்” திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. பரத்தை”காதல்” பரத் என்று கூட அழைக்கத் தொடங்கினார்கள். அதன் பின் “எம் மகன்”, “வெயில்” என பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துவந்தார் பரத். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது கேரியர் சரியத்தொடங்கியது.

இடைப்பட்ட காலத்தில் பரத் நடித்த எந்த திரைப்படமும் அவரின் கேரியருக்கு கைக்கொடுக்கவில்லை. சமீபத்தில் பரத் நடித்த “சிம்பா”, “காளிதாஸ்” போன்ற திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே மலையாளத்தில் “குருப்”, “ஷனம்” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

மேலும் ஹிந்தியில் “ராதே” என்ற திரைப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ஒரு முன்னணி கதாப்பாத்திரத்தில் பரத் நடித்திருந்தார். தற்போது தமிழில் “யாக்கைத்திரி”, “முன்னறிவான்”, “மிரல்” போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரத் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, தான் அறிமுகமான “பாய்ஸ்” திரைப்படத்தில் ஷங்கரிடம் கண்டபடி திட்டுவாங்கிய ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்திருந்தார்.

“பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற மாரோ மாரோ பாடலின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு காட்சியில் கிட்டத்தட்ட 1000 பேர் தக்காளியை தூக்கி எறியவேண்டும். அனைவரும் தக்காளி எறிய நான் மட்டும் எறியாமல் உட்கார்ந்துகொண்டேன். இதனை பார்த்துவிட்டார் ஷங்கர்.

அப்போது என்னை அழைத்து அங்கிருந்த 1000 பேருக்கும் முன்னால் என்னை பார்த்து ‘நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்க? ஒரு காட்சி எடுக்க என்ன செல்வாகும் தெரியுமா?’ என்று அனைவரின் முன்னாலும் கத்தினார். அப்போது நான் சின்ன பையன். எனது கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிட்டது.

அதன் பின் அவர் என்னை தனியாக அழைத்து ‘சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அதிக செலவு இருக்கிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. நீ இப்படி செய்ததால் நான் மறுபடியும் இந்த காட்சியை எடுக்கவேண்டும்’ என்று அவரின் நிலையை எனக்கு தெளிவுப்படுத்தினார்” என அப்பேட்டியில் பரத் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்ற முனைப்பில் இருக்கும்போது இது போன்ற தவறுகள் நேர்ந்தால் கோபம் வருவது இயல்புதானே. அதுவும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா??

 

google news
Continue Reading

More in Cinema News

To Top