பேன் இந்தியா படம்… சூர்யாவுக்கு மார்க்கெட் இல்ல… அதிரடியாய் ஹீரோவை மாற்றிய ஷங்கர்!!
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தையும், கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” என்ற வரலாற்று புனைவு நாவலை ஷங்கர் திரைப்படமாக உருவாக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.
“பொன்னியின் செல்வன்” நாவலை மணிரத்னம் இயக்கி வெற்றிகண்ட பிறகு “உடையார்”, “வேள்பாரி” போன்ற வரலாற்று நாவல்களின் மீது தமிழ் இயக்குனர்களின் கண்கள் குறியாக இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு “உடையார்” நாவலை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார் என தகவல் வந்தது.
அதனை தொடர்ந்துதான் ஷங்கர் “வேள்பாரி” நாவலை படமாக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் இத்திரைப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி எனவும் இதில் சூர்யா வேள்பாரியாக நடிக்கிறார் எனவும் தகவல் வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி “1000 கோடி ரூபாய் பட்ஜெட் என்பதாலும் வேள்பாரி ஒரு பேன் இந்தியா திரைப்படம் என்பதாலும் இத்திரைப்படத்தில் கேஜிஎஃப் யாஷை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
சூர்யா மிகவும் திறமையான நடிகர்தான். ஆனால் யாஷையும் சூர்யாவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் யாஷை வைத்து இயக்கினால்தான் பேன் இந்திய அளவில் படத்தை வியாபாரம் செய்ய முடியும் என படக்குழு முடிவுசெய்திருக்கிறது” என கூறினார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர்.
கன்னட சினிமாவில் சாதாரண நடிகராக தனது கேரியரை தொடங்கிய நடிகர் யாஷ், “கே ஜி எஃப்” திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்திய நடிகராக திகழ்ந்து வருகிறார். அந்த அளவுக்கு அத்திரைப்படம் அவரது கேரியரை எங்கோ கொண்டிசென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.