Game Changer: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் கேம் சேஞ்சர். மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான நா நா ஹைரானா பாடல் வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த மூன்றாவது பாடலில் இருக்கும் சிறப்பு அம்சத்தை பற்றி சமீபத்தில் ஷங்கர் பலவித புதுமையான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்தப் பாடல் இன்ஃபிராரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் கொண்ட கேமிராவால் படமாக்கப்பட்டிருக்கிறதாம். இதன் மூலம் இந்தியாவிலேயே அகச்சிவப்பு கதிர்கள் கொண்ட கேமிராவால் எடுக்கப்பட்ட முதல் பாடலாகவும் இந்த கேம் சேஞ்சர் பட பாடல் விளங்குகிறதாம்.
இதையும் படிங்க: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் சீரிஸ் டூ சினிமா… இத மிஸ் பண்ணிடாதீங்க!..
இந்தப் பாடலை பொறுத்தவரைக்கும் ஒரு கனவு உலகத்தில் நடக்கும் பாடலாக இது இருக்கும் பட்சத்தில் பல வித வண்ணங்களில் இருக்கவேண்டும் என ஷங்கர் விரும்பியிருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் மேற்கத்திய மற்றும் கர்நாடிக் இசை கலவையில் இந்தப் பாடல் உருவாகியிருக்கிறதாம். இந்த மாதிரியான கனவு உலகத்தில் படமாக்க வேண்டும் என்பதற்காக நியூஸிலாந்தில் போய் படமாக்கியிருக்கிறார்கள்.

அங்குதான் அதற்கான லொக்கேஷனும் இருந்ததாம். அதனால் ஐந்து நாள்கள் ராம்சரணும் கியாரா அத்வானியும் அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். மெலோடியில் அமைந்த இந்தப் பாடல் கண்டிப்பாக ரசிகர்களை இது ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: கலைஞரே கூப்பிட்டு இப்படி சொல்லும் போது மறுக்க முடியுமா? ‘தூக்குமேடை’யில் சந்திரசேகர் நடிக்க காரணம்
சங்கர் என்றாலே பிரம்மாண்டம் என அனைவருக்கும் தெரியும். அது சில வேளைகளில் அவருக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அவர் எடுக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பல கோடி செலவு செய்து எடுப்பார். சிவாஜி , நண்பன், எந்திரன் போன்ற படங்களை போல இந்த கேம் சேஞ்சர் படத்திலும் நா நா ஹைரானா பாடல் இருக்கும் என்று தெரிகிறது.
