பாலியல் புகாரில் சிக்கிய ஷங்கரின் மருமகன்....திரையுலகினர் அதிர்ச்சி...
தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை எடுத்து இந்திய அளவில் தமிழ் சினிமா தரத்தை உயர்த்தியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இவரின் மூத்த மருமகன் மீது பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கரின் மூத்தமகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். புதுச்சேரி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கிரிக்கெட் கிளப்பில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அவரின் புகாரை ஏற்காமல் அந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். எனவே, அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எனவே, பயிற்சியாளர் தாமரைக்கணன், கிளப் உரிமையாளர் தாமோதரன், அவரின் மகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms