எங்க போனாலும் இவருக்கு ஏழரை தான் போல.! மீண்டும் சிக்கலில் இயக்குனர் ஷங்கர்.!

Published on: March 30, 2022
---Advertisement---

ஒரு காலத்தில் பிரமாண்ட இயக்குனர் என்று பெரியெடுத்த ஷங்கர் தற்போது மீண்டும் பழைய ஹிட் இயக்குனராக வலம் வர கடுமையாக உழைத்து வருகிறார் என்றே கூறவேண்டும். ஆனால், என்னவோ அவர் கைவைத்த இடமெல்லாம் கண்ணிவெடி வைத்தார் போல ஆகிவிடுகிறது போல.

shankar

ஆம், அவர் தயாரிப்பில் இறங்கிய இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படம் டிராப். கமல்ஹாசனை வைத்து மீண்டும் அவர் இயக்க இருந்த இந்தியன்2 திரைப்படம் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

உடனே அடுத்ததாக, தெலுங்கு முன்னணி ஹீரோ ராம் சரணை வைத்து, ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்த பட ஷூட்டிங் தற்போது தடைபட்டுள்ளதாம். அதற்க்கு பல காரணங்கள் வெளியாகியுள்ள்ளது. அதாவது, தில் ராஜுவிடம் தற்போது போதிய பணம் இல்லை. அடுத்து விஜய் படம் தயாரிக்கிறார் . இன்னும் சில படங்கள் தயாரிக்கிறார் அதனால, தயாரிப்பாளர் தற்போது கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – ஸ்ரீதேவியை பொண்ணுக்கேட்டு அசிங்கப்பட்ட ரஜினிகாந்த்.! இதுதான் நடந்ததாம்..

இன்னோர் பக்கம், ராம் சரண் நடித்த RRR திரைப்படம் அண்மையில் வெளியானது. அதன் பட விழாக்களில் பங்கேற்று வருவதால் ஷங்கர் பட ஷூட்டிங் தடைபடுகிறது என கூறப்படுகிறது. உண்மையில் எதற்காக ஷூட்டிங் நின்றது என தெரியவில்லை. படம் குறிப்பிட்ட தேதியில் எடுத்து முடித்து ரிலீஸ் செய்தால் போதும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment