ஒரு சீனுக்கு ஒரு வருடமா?!.. அடங்காத ஷங்கர்!.. அப்புறம் ஏன் பட்ஜெட் எகிறாது!...
ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் உருவானதால் தொடர்ந்து அதிக பட்ஜெட் உள்ள படங்களை மட்டுமே இயக்கி வருகிறார். காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், எந்திரன், ஐ, 2.0 ஆகிய பல படங்களை இயக்கினார்.
இவர் இயக்கும் படங்களில் பாடல்களை மிகவும் அதிக பொருட்செலவில் எடுப்பார். ஜீன்ஸ் திரைப்படத்த்தில் ஒரு பாடல் காட்சிக்காக உலகத்தின் ஏழு அதிசயங்களுக்கும் சென்று பிரசாந்தையும், ஐஸ்வர்யா ராயையும் அங்கெல்லாம் ஆட வைத்து பாடலை எடுத்தார். குறிப்பாக இவரின் பாடல்களில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களையும் பயன்படுத்துவார்.
பெரும்பாலும், இவரின் படங்களில் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப்படும் இல்லை அதிக பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்படும். சிவாஜி படத்தில் இடம் பெற்ற ‘சஹானா சாரல் தூவுதோ’ பாடலும், ‘வாஜி வாஜி சிவாஜி’ பாடலுக்கும் பல கோடி செட் போட்டு எடுத்தார்.
அதேபோல், அப்படத்தில் ‘ஒரு கூடை சன் லைட்’ பாடலில் ரஜினியை வெள்ளையாக வருவார். அதாவது வெள்ளைக்காரன் போல இருப்பார். இதற்காக ரஜினியின் நடன அசைவுகளை ஒரு ஐரோப்பிய பெண்ணை வைத்து படமாக்கி அவருடைய தோல் நிறத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிக்கு பொருத்தியுள்ளனர். படத்தில் வெறும் 5 நிமிடம் வரும் அந்த பாடலுக்காக 25 பேர் கொண்ட குழு ஒரு வேடம் வேலை பார்த்தார்களாம்.
அப்புறம் ஏன் எகிறாது பட்ஜெட்!..