கமல் ரஜினியை வச்சி ஷங்கர் போட்ட மெகா பிளான்!. மிஸ் ஆனது அவராலதான்!.. நடக்காம போச்சே!..

எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு பின் தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக வலம் வருபவர்கள் ரஜினி - கமல். ரஜினிக்கு முன்பே கமல்ஹாசன் ஒரு பிரபலமான நடிகராகவே இருந்தார். ‘நான் நடிக்க வரும்போதே கமல் பெரிய ஸ்டார்’ என ரஜினி பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும், தன்னுடன் சேர்ந்து பல படங்களில் ரஜினி நடிக்க கமல் அனுமதித்தார். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புத விளக்கும், ஆடு புலி ஆட்டம் என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

இதையும் படிங்க: காசு விஷயத்துல சூர்யாவோட அப்பா என்ன மாதிரி ஆள் தெரியுமா?.. கஜினி பட கதையை சொன்ன தயாரிப்பாளர்!..

ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிக்க முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார். இந்த முடிவை எடுத்ததும் கமல்தான். திரையில் ரஜினி - கமலுக்கு இடையே போட்டி இருந்தாலும் நிஜ வாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகவே வலம் வருகிறார்கள்.

இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பல வருடங்களாக ஆசைப்படுகிறார்கள். பல இயக்குனர்கள் முயற்சி செய்து அது நடக்கவில்லை. தற்போது கமல்ஹாசனின் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

2.0

2.0

இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ‘கமல் ரஜினி இருவரையும் வைத்து எப்போது ஒரு படமெடுப்பீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன பதில் இதுதான்.

2.0 படத்திலேயே அப்படித்தான் திட்டமிட்டேன். ஆனால், கமல் சாரிடம் அப்போது கால்ஷீட் இல்லை. எனவேதான், படம் முழுக்க ரஜினி நடித்தார் என ஷங்கர் பதில் சொன்னார். அதேபோல், இந்தியன், சிவாஜி, முதல்வன் என 3 கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை’ என ஷங்கர் ஏற்கனவே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it