இல்ல சார் என்னால இப்ப முடியாது!.. பயந்த ஷங்கர்.. கடுப்பாகி திட்டிய எஸ்.ஏ.சி…

Published on: June 27, 2023
sac
---Advertisement---

ஜென்டில் மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படத்திலிருந்தே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கியவர். காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ஷங்கர் இயக்கிய படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இவரின் படங்கள் சாதாரண மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியே பேசியது. மேலும், பாடல் காட்சிகளில் கிராபிக்ஸ் கலந்து ரசிகர்களுக்கு காட்சி விருந்து வைப்பவர். அந்நியன், எந்திரன், சிவாஜி, 2.0 என இயக்கிய படங்கள் அதிக அளவில் பேசப்பட்டது. பல கோடிகளையும் வசூலித்து சாதனை படைத்தது.

இப்போது கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார். ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவர் நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக வேண்டுமென ஆசைப்பட்டு எஸ்.ஏ.சியிடம் வாய்ப்பு கேட்க அவர் ஷங்கரை உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.

sac

பொதுவாக ஒரு உதவி இயக்குனர் ஒரு இயக்குனரிடம் ஐந்து அல்லது ஆறு படங்கள் வேலை செய்துவிட்டு சொந்தமாக படம் இயக்க சென்றுவிடுவார்கள். ஆனால், உதவி இயக்குனராக அவருக்கு கிடைத்த சம்பளம் அவருக்கு திருப்தியாக இருந்ததால் ஷங்கருக்கு படம் இயக்க செல்லும் எண்ணமே வரவில்லையாம். ஒருகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரே கடுப்பாகி ‘இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படியே இருக்க போகிறாய். போ.. சொந்தமாக டைரக்ட் பண்ணு’ என திட்டய பின்னரே கதைகளை உருவாக்க துவங்கியுள்ளார். இதை ஷங்கரே அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

shanakar

ஒருமுறை எஸ்.ஏ.சி அளித்த பேட்டியில் ‘ஷங்கர் என்னிடம் 17 படங்களில் வேலை செய்தார். எந்த உதவி இயக்குனர்கள் அத்தனை படங்களில் வேலை செய்ய மாட்டார்கள். ஒருமுறை குஞ்சுமோன் என்னை தொடர்பு கொண்டு உங்களிடம் நல்ல உதவி இயக்குனர் இருந்தால் என்னிடம் அனுப்புங்கள் என்றார். நான் ஷங்கரிடம் சொல்ல ‘இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு போகிறேன்’ என்றார். அது எனக்கு பெருமைதான்’ என கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.