தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர்தான் சண்முக பாண்டியன். 2015ம் வருடம் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் மதுர வீரன், படைத்தலைவன் போன்ற படங்களிலும் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் கொம்புசீவி என்கிற படத்திலும் நடித்தார்.
இந்த படத்தை பொன்ராம் இயக்க சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஏனோ ரசிகர்களை இப்படம் கவரவில்லை. 15 கோடி செலவில் உருவான இப்படம் 2 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. எனவே, படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.

விஜயகாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் நடிக்கும் படங்களின் கதையை அவரின் மனைவி பிரேமலதாவும், பிரேமலதாவின் சகோதரர் சுதீஷூம் கேட்பார்கள். அவர்கள் கேட்ட பிறகே அந்த கதையை விஜயகாந்த் கேட்பார். அதுபோலவே சண்முக பாண்டியன் விஷயத்திலும் பிரேமலதாவும், சதீஷுமே கதை கேட்டு வருகிறார்கள்.
கொம்பு சீவி படத்தின் கதையை கூட தேர்ந்தெடுத்தது பிரேமலதாதான் என்கிறார்கள். இந்த படம் படம் சரியாக போகவில்லை என்பதால் ‘இனிமேல் நானே கதை கேட்டு முடிவெடுத்துக் கொள்கிறேன்’ என சொல்லிவிட்டாராம் சண்முக பாண்டியன்.
மேலும் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் உட்பட மூன்று படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் மற்றும் சத்யராஜ், சிபிராஜ் ஆகிய இருவரையும் வைத்து கட்டப்பாவ காணோம் என்கிற படத்தை இயக்கிய மணி சீயோன் ஆகிய இருவரின் கதையை டிக் அடித்து வைத்திருக்கிறாராம். இதுபோக இன்னும் இரண்டு இயக்குனர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
இதுவே சண்முக பாண்டியனின் லைன் அப்-ஆக இருக்கும் எனத் தெரிகிறது. அதோடு இனிமேல் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தின் நடிக்க வேண்டாம். ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம்.