சண்முக பாண்டியன் கையில் இருக்கும் 6 திரைப்படங்கள்!.. சாதித்து காட்டுவாரா கேப்டன் மகன்?!.
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இப்போது இவருக்கு 30 வயது ஆகிறது. 2015ம் வருடம் சகாப்தம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன்பின் சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், விஜயகாந்தின் உடல் நிலை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
இப்போது விஜயகாந்த் காலமாகிவிட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் சண்முக பாண்டியன். அப்படி அவரின் கையில் இருக்கும் 6 திரைப்படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். படைத்தலைவன் என்கிற படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பே துவங்கியது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: ரசிகர்கள் முட்டாளா? புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…
யானைகளுடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியையும் அவர் வளர்த்திருக்கிறார். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கி வருகிறார். மேலும், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி பாஸ்கர் என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இந்த வருடம் வெளியாகவுள்ளது.
அடுத்து பூபாலன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் மித்ரன். இந்த படம் 3 வருடங்களுக்கு முன்பே துவங்கியது. விரைவில் இப்படம் முடியவுள்ளது. 3வதாக சசிக்குமாரின் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிக்கவுள்ள குற்றப்பரம்பரை. இது வெப் சீரியஸாக உருவாகவிருக்கிறது.
இதையும் படிங்க: எந்த தைரியத்துல வந்த? ரஜினியை தேடி வந்தது குத்தமா? பாலசந்தர் கேட்ட கேள்வியால் ஆடிப்போன இயக்குனர்
4வதாக ‘தமிழன் என்று சொல்லடா’. இந்த படத்தின் வேலைகளும் சில வருடங்களுக்கு முன்பே துவங்கியது. இதில், விஜயகாந்தும் சில காட்சிகளில் நடித்தார். இதுதான் விஜயகாந்த் நடித்த கடைசி திரைப்படம். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். விஜயகாந்தின் உடல்நிலை காரணமாகவே இப்படம் நிறுத்தப்பட்டது. தற்போது விஜயகாந்துக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைத்து படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சொல்லப்படுகிறது.
5வதாக ராகவா லாரன்ஸுடன் இணைந்து ஒரு படமும், 6வதாக விஷாலுடன் இணைந்து ஒரு படம் என பேச்சுவார்த்தை போய்கொண்டிருக்கிறது. இதில் எது டேக் ஆப் ஆகும் என தெரியவில்லை. விஷால் நடிப்பது சந்தேகம்தான் என்றாலும் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியனுடன் கண்டிப்பாக இணைந்து நடிக்கும் படத்தின் வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.