தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நடிகர் என்பதைவிட மனிதாபிமானமிக்க ஒரு நல்ல மனிதராக இருந்ததால்தான் மக்களுக்கு அவரை பிடித்துப் போனது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை அவர் மற்றவர்களுக்கு செய்துவந்தார். பணமாகவும், பணம் சம்பந்தப்படாத மற்ற உதவிகளையும் செய்தார்.
குறிப்பக பசிக்கும் பல பேருக்கு உணவையும் அளித்தார். மக்கள் கொண்டாடும் ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்தார்.. விஜயகாந்த் இருந்தபோது அவரை ட்ரோல் செய்த ரசிகர்களும், ஊடகங்களும் கூட அவர் மறைந்த போது அவரைப் பற்றி பெருமையாக பேசின. இப்போதும் பேசி வருகின்றன.
விஜயகாந்த் வாரிசாக சினிமாவில் களமிறங்கியிருப்பவர் அவரின் மகன் சண்முக பாண்டியன். சில நாட்களுக்கு முன்பு கூட அவரின் நடிப்பில் கொம்பு சீவி என்கிற திரைப்படம் வெளியானது. சினிமாவில் ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் ஒரு ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
நான் அப்பாவுடன் ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தேன். அப்போது கூட்டத்தில் என்னை நசுக்கி விட்டார்கள்.. அப்பா வந்து ஒரே அடிதான் அடித்தார். 15 பேர் ஓரம்போய் விழுந்தாங்க.. அதன்பின் என்னை அங்கிருந்து கூட்டி வந்தார்.. சுலபமாக அவரால் ஒரு கூட்டத்தில் பலரையும் தள்ள முடியும்.. அந்த அளவுக்கு அவருக்கு பலமும் இருந்தது. யாராவது அப்பாகிட்ட திமிரா பேசினா அப்பா சொல்ற விதத்திலே அமைதியாகி விடுவாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.




