பாக்கியராஜ் இயக்கிய வேட்டியை மடிச்சி கட்டு திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு சக்கரக்கட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
சக்கரக்கட்டி திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்களுக்கு முயற்சித்து வந்தார் சாந்தனு. அதையடுத்து அவர் நடித்த சித்து +1, கண்டேன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.
2017 இல் வந்த கோடிட்ட இடங்களை நிரப்புக, பாவ கதைகள், மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் சாந்தனு திரை வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன. இந்த நிலையில் தற்சமயம் இராவண கோட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார் சாந்தனு.
படத்திற்காக சாந்தனு செய்த வேலை:
இந்த படம் வருகிற 12 மே அன்று வெளியாக இருக்கிறது. ராமநாதபுரத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராமநாதப்புரத்தை பின்புலமாக கொண்டு படம் எடுக்கப்பட்டதால் சாந்தனுவை கருப்பாக்குவதற்கு பல வேலைகளை பார்த்துள்ளார் இயக்குனர்.
இதற்காக சாந்தனு தினமும் மொட்டை மாடியில் எண்ணையை தடவிக்கொண்டு வெயிலில் படுத்துள்ளார். இதை அவர் இயக்குனருக்கு போட்டோவும் எடுத்து அனுப்புவாராம். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த படத்தில் சாந்தனு நடித்துள்ளார் என இயக்குனர் பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…