பட்ஜெட்டே 9 கோடிதான்... ஆனா ஆடியோ லாஞ்சுக்கு 5 கோடி?... சாந்தனு பட தயாரிப்பாளரின் அட்ராசிட்டி...
சாந்தனு தற்போது "இராவண கோட்டம்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை திட்டக்குடி கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் பல மூத்த பத்திரிக்கையாளர்களும் பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவிக்கும் சாந்தனுவின் தந்தையான பாக்யராஜ்ஜிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
அதாவது கண்ணன் ரவி தமிழ்நாட்டில் இருந்தபோது அவர் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால் அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்திருக்கிறது. போலீஸாரிடம் திருமணம் செய்துவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் போலீஸாரால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியவில்லை.
அந்த சமயத்தில் கண்ணன் ரவியின் நண்பர்கள் சிலர் பாக்யராஜின் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பாக்யராஜிடம் வந்து கண்ணன் ரவியின் காதலை குறித்து கூற, பாக்யராஜ்ஜே கண்ணன் ரவிக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார். அதன் பின் கண்ணன் ரவி தனது மனைவியுடன் துபாய்க்கு வந்து மிகப் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டார். அந்த நன்றிக்கடனை தீர்ப்பதற்காகவே சாந்தனுவை வைத்து "இராவண கோட்டம்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் படத்தின் பட்ஜெட் 9 கோடிகள் இருக்க, ஆடியோ லான்ஞ்சை விமரிசையாக 5 கோடிகள் செலவு செய்து துபாயில் நடத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: மைக் இருக்கிறது தெரியாம அந்த வார்த்தையை சொல்லிட்டேன்..! – படக்குழுவை திடுக்கிட வைத்த லோகேஷ்…