பயில்வான் ரங்கநாதனை பங்கம் செய்த சாந்தனு… என்ன இப்படி கலாய்ச்சிட்டாங்க?
"சக்கரக்கட்டி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான சாந்தனு பாக்யராஜ், தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் என்றாலும் அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. அதன் பின் "சித்து பிளஸ்2", "கண்டேன்", "ஆயிரம் விளக்கு" போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் எந்த திரைப்படமும் அவரது கேரியருக்கு கைக்கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "பாவக் கதைகள்" திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் சாந்தனு. அதனை தொடர்ந்து விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படத்தில் பார்கவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள்தான் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும் அவர் நடித்திருந்த பார்கவ் கதாப்பாத்திரத்தை பலரும் டிரோல் செய்யத்தொடங்கினர். எனினும் அந்த டிரோல்களை எல்லாம் பாஸிட்டிவ்வாகவே எடுத்துக்கொண்டார் சாந்தனு.
இதனை தொடர்ந்து "கசடதபற", "முருங்கைக்காய் சிப்ஸ்" போன்ற திரைப்படங்களில் நடித்த சாந்தனு, தற்போது "இராவண கோட்டம்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் "இராவண கோட்டம்" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பினார். அக்கேள்விகளுக்கு பங்கமாய் கலாய்க்கும் வகையில் பல பதில்களை நடிகர் சாந்தனுவும் இயக்குனர் விக்ரம் சுகுமாரனும் அளித்தனர்.
இராமநாதபுர மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களால் தண்ணீர் பஞ்சம் நிலவியது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, முதலில் சாந்தனு, "அண்ணே, வாங்க நல்லா இருக்கீங்களா?" என நக்கலாக கேட்டார். அதன் பின் பயில்வான் ரங்கநாதன் "ஏன் பாக்யராஜ் வரவில்லை ?" என கேட்க, அதற்கு சாந்தனு, 'அவர் ஊரில் இல்லை. அதுவும் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கவும் இல்லை, ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். இதை வைத்து எதுவும் சர்ச்சையான டைட்டிலை யூட்யூப்பில் போடுவதற்காகவா?" என கேட்டுவிட்டு, "நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது நீங்க என்ன பேசினாலும் அது படத்திற்கு பப்ளிசிட்டிதான். ஆதலால் எதற்கு வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன்" என மிகவும் கிண்டல் தொனியோடு கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கதையை மாற்றியதில் என்ன தவறு இருக்கு?.. ‘பொன்னியின் செல்வன்’ விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்..