ரீல் மருமகளை ரியல் மருமகளாக்கிய டான்ஸ் மாஸ்டர் சாந்தி… இது நல்லா இருக்கே?

Published On: April 17, 2025
| Posted By : Akhilan

Shanthi Master: தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் சாந்தி தன்னுடைய மருமகளை ரொம்பவே ஈஸியாக தேர்வு செய்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து அவர் மருமகள் சொல்லி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு தொடர் என்றால் அது மெட்டி ஒலி என கூறிவிடுவார்கள். சீரியல் அடித்த ஹிட்டை போலவே அதன் பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் வெற்றியை பெற்றது.

இதில் நடனமாடியவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாந்தி. தமிழில் நிறைய படங்களில் பின்னணியில் நடனமாடி இருந்தாலும் அவருக்கு இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து 90களில் விஜய் மற்றும் அஜித்தின் எல்லா பாடல்களிலும் முன்னணியில் இவரை பார்க்க முடியும்.

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் கலந்துகொண்டு ஜெயிக்க முடியாமல் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தின் ஜன கன மன பாடலின் கோரியோகிராபர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் டிவியின் சக்திவேல் தொடரில் மாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களில் அதில் தனக்கு மூத்த மருமகளாக நடித்த நடிகையை தனது சொந்த மருமகள் ஆக்கிக்கொண்ட ஆச்சரிய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் மருமகள் மற்றும் நடிகையான சந்தியா கூறும்போது சிலர் கீழ் போல் கொட்டுவார்கள் ஆனால் அவர்களின் மனதில் நல்லெண்ணம் மட்டும் தான் இருக்கும். அதுபோல்தான் என்னுடைய மாமியார். அவர் கடுகடு என பேசினாலும் அவருடைய மனதில் எப்போதுமே நல்லதை மட்டும் தான் நினைப்பார்.

எங்களுடைய ஷூட்டிங் தொடங்கிய சில மணிநேரத்தில் அவருடைய மகன் முரளி படத்தை காட்டி இது என் மகன் கட்டிக்கிறீயா எனக் கேட்டார். அப்போது எனக்கும் சம்மந்தம் பார்த்து கொண்டு இருப்பதால் ஒத்துக்கொண்டேன். மாஸ்டர் ரொம்ப ஸ்டிரிக்ட் ஏன் சம்மதிச்ச என பலர் கலாய்த்தனர். ஆனால் என் மாமியர் அவ்வளவு தங்கமானவங்க என தெரிவித்து இருக்கிறார்.